தங்க டாய்லெட்டில் கக்கா போன விஜய் மல்லையா.. இனி செராமிக்தான் போங்க!
Recommended Video

லண்டன்: லண்டனில் உள்ள சொகுசு வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்போது அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அந்த வீட்டை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடனை பெற்றார். பின்னர் அதை திருப்பி செலுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொண்டதால் லண்டனுக்கு தப்பியோடினார். லண்டன் ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸுடன் இணைந்து மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு வருவதை தவிர்க்க சிறைச்சாலைகள் குறித்து நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோ
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறை சாலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தினால் சிறை வைப்பதற்கான அறையை வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஒப்புதல்
இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் லண்டனில் இருக்கும் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ 185 கோடி கடனாக பெற்றார் விஜய் மல்லையா. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்துவதாக ஒப்புக் கொண்டார்.

வழக்கு தொடர்ந்த வங்கி
மல்லையா சொன்ன 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதன்பின்னரும், தான் திருப்பிச் செலுத்துவதாக கூறிய 185 கோடி ரூபாயை அவர் செலுத்த தவறிவிட்டார். இதையடுத்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் சுவிஸ் வங்கி வழக்கு தொடர்ந்தது. அதன்படி லண்டன் வீட்டிலிருந்து மல்லையா குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்க சுவிஸ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

பங்களா
இந்த வழக்கில் அடுத்த ஆண்டு மே 7-ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவே வழக்கின் தீர்ப்பு மல்லையாவுக்கு எதிராகத் தான் வரும் என்று தெரிகிறது. லண்டனில் கார்ன்வெல் டெரேஸில் உள்ள பங்களாவில் தங்கத்திலாலான கழிப்பறை உள்ளது.

பெரிய பின்னடைவு
இத்தகைய சொகுசு பங்களா மல்லையாவின் கையை விட்டு செல்கிறது. ஏற்கெனவே இந்திய வங்கிகளால் அவரது சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது லண்டன் வீட்டை இழப்பது மல்லையாவுக்கு பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications