பிரதமர் பதவியில் 2 வாரம் தான் ரிஷி சுனக் இருக்க போகிறாரா.. பிரிட்டனில் பொது தேர்தல் எப்படி நடக்கும்?
லண்டன்: பிரிட்டன் நாட்டில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குத் தேர்தல் செயல்முறை என்ன.. இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இப்போது ரிஷி சுனக் இருக்கிறார். அங்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குத் தேர்தல் செயல்முறை என்ன.. இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பல ஒற்றுமைகள்: நமது நாட்டில் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கும் பிரிட்டன் பொதுத் தேர்தலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.. ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாடு எப்படி 543 லோக்சபா தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ.. அதேபோல பிரிட்டனும் 650 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் எப்படி எம்பிக்களை தேர்வு செய்கிறோமோ.. அதேபோல அங்கும் ஒவ்வொரு தொகுதியிலும், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றத்தில் அந்த குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதிகளாக இவர்கள் செயல்படுவார்கள்.
வாக்குச் சீட்டு: பிரிட்டன் நாட்டில் வாக்குச் சீட்டு முறையிலே தேர்தல் நடைபெறும். யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். இந்த 650 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். அங்கு இந்த முறை கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அங்கு 650 சீட்கள் இருக்கும் நிலையில், எந்தக் கட்சிக்கு 326 இடங்கள் கிடைக்கிறதோ.. அந்தக் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.
சரி பிரிட்டன் தேர்தலில் யார் வாக்களிக்கலாம்.. அங்கு இந்த முறை வாக்களிக்க சுமார் 5 கோடி பிரிட்டன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர். பிரிட்டன் தேர்தலில் 18 வயதைக் கடந்த அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிக்கும் முன்பு பதிவு செய்திருக்க வேண்டும் என்பதே ஒரே கண்டிஷன் ஆகும். அங்கு இந்த முறை ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.. அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.. தபால் வாக்கு மூலமாகவும் வாக்களிக்க முடியும்.
வாக்கு எண்ணிக்கை: எப்போது பிரிட்டனில் வாக்குப்பதிவு முடிந்து உடன் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். நமது நாட்டை போல இதற்காகத் தனியாக வாக்கு எண்ணிக்கை நாள் எல்லாம் அறிவிக்க மாட்டார்கள். தேர்தல் முடிவுகள் வர வர எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதும் தெரிய வரும். பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சில மணி நேரத்தில் முடிந்துவிடும்.. கிராமப்புற தொகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிய தாமதமாகும்.
தொங்கு நாடாளுமன்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சரிபாதி தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். ஒரு வேளை எந்த கட்சியும் பெரும்பான்மைக்குத் தேவையான 325 இடங்களில் வெல்லவில்லை என்றால் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும். அதுபோன்ற சூழல்களில் பிரதமர் பதவியில் நீட்டிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். ஒரு வேலை பிரதமர் பதவியில் இருப்பவரால் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி ஆட்சியை அமைக்க முடியவில்லை என்றால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால், பிரிட்டனில் நமது நாட்டை போல இல்லை. அங்குக் கூட்டணி ஆட்சி என்பது ரொம்பவே அரிதானது. அங்கு 1945க்குப் பிறகு 2010 கன்சர்வேடிவ்- லிபரல் டெமாக்ராட் இணைந்து கூட்டணி அரசை அமைந்தது. அதேபோல 2017இல் கன்சர்வேடிவ் கட்சி சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருந்தது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications