"பெண் என்பவர் யார்!" திருநங்கை தொடர்பான வழக்கில் பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு
லண்டன்: சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதாவது பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருநங்கைகளைப் பெண்களாகக் கருத முடியுமா என்பதே வழக்காகும். இந்த வழக்கில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் எனத் தீர்ப்பளித்த பிரிட்டன் நீதிமன்றம், அதேநேரம் பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனத் தீர்ப்பளித்துள்ளது.
உலகெங்கும் இன்னுமே கூட பல நாடுகளில் திருநங்கைகளுக்கான உரிமைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. பல நாடுகளில் இதற்கான சட்டப்போராட்டம் நடந்தே வருகிறது. இதற்கிடையே பிரிட்டன் நீதிமன்றத்தில் பெண் என்ற வார்த்தைக்குச் சட்டப்படி என்ன பொருள் என்ற வழக்கு நடந்து வந்தது. அதில் பிரிட்டன் உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டன் நீதிமன்றம்
அதாவது பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என்று பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதாவது சட்டப்படி பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே பெண்ணாகக் கருதப்படுவார் என்ற போதிலும், சட்டம் இன்னும் திருநங்கைகளுக்குப் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்றும் இதனால் தங்கள் தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு மட்டும் முழு வெற்றியைத் தரவில்லை என்றும் பிரிட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
என்ன வழக்கு
ஸ்காட்லாந்து அரசுக்கும் அங்குள்ள பெண்கள் குழுவிற்கும் இடையே நீண்ட காலமாக நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாலின அங்கீகாரச் சான்றிதழ் கொண்ட திருநங்கைகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகச் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஸ்காட்லாந்து அரசின் வாதம். அதாவது பெண் ஒருவர் மீது பாகுபாடு காட்டப்பட்டாலோ அல்லது பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கும்போது அவர்களைப் பாதுகாக்க இருக்கும் பிரதானச் சட்டங்கள் திருநங்கைகளுக்கும் பொருந்தும் என்பது ஸ்காட்லாந்து அரசின் வாதம்.
இருப்பினும், ஸ்காட்லாந்து அரசின் இந்த நிலைப்பாட்டை அங்குள்ள பெண்களுக்காக ஸ்காட்லாந்து அமைப்பு மிகக் கடுமையாக எதிர்த்தது. பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்றும் திருநங்கைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிட்டது. அதாவது சட்டப்படி பெண்ணாக ஒருவர் கருதப்பட வேண்டும் என்றால் அவர் பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.
விரிவான தீர்ப்பளித்த நீதிபதிகள்
இந்த வழக்கில் தான் 88 பக்கங்களைக் கொண்டு தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், "சமத்துவச் சட்டம் 2010இல் பாலினத்தின் வரையறை விளக்கப்பட்டுள்ளது. ஒருவரது பாலினம், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அது பிறப்பின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த நபர்களின் உரிமையைப் பாதுகாக்கவே சட்டம் இருக்கிறது. அதன்படி பெண்களைப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் அல்லது விதிகள் குறிப்பாக ஆண்களுக்குப் பொருந்தாது.
சமத்துவச் சட்டத்தில் பிறப்பின் அடிப்படையில் என்ற வார்த்தை இல்லை என்றாலும், வழக்கமாக ஒரு நபரை ஆண் அல்லது பெண்ணாகப் பிறப்பின் அடிப்படையிலேயே குறிப்பார்கள். அந்த பயோலஜிக்கல் பண்புகள் அடிப்படையிலேயே குறிப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் வேறு எந்த விளக்கமும் தேவையில்லை. ஆண்களும் பெண்களும் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறார்கள்" என்றார்.
திருநங்கைகளுக்குப் பாதுகாப்பு இருக்கு
அதேநேரம் திருநங்கைகளுக்கு இன்னும் சட்டத்தின்படி பாதுகாப்பு இருக்கும் என்பதை விளக்கிய நீதிமன்றம், "சமத்துவச் சட்டம் 2010 திருநங்கைகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. பாலின மறுசீரமைப்பு பாகுபாட்டிலிருந்து மட்டுமல்லாமல், அவர்கள் பெற்ற பாலினத்தில் நேரடிப் பாகுபாடு, மறைமுகப் பாகுபாடு மற்றும் உள்ளடக்கத்தில் துன்புறுத்தலுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்கும்" என்றார்.
அதாவது ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினாலும் சட்டப்படி அவர்கள் ஆணாகவே கருதப்படுவார்கள். அதேநேரம் பாலின மாற்றம் செய்ததற்கான பாகுபாடு மட்டுமின்றி (பெண்ணாக மாறியதால்) பெண் என்ற அடிப்படையில் அவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டாலும் சட்டப் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்கும்
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications