"போதை" ராஜா.. டிரில்லை எடுத்து மண்டையில் ஓட்டையை போட்ட இளைஞர்.. அதுவும் ஒரு முறை இல்லை 3 முறை! ஷாக்
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு ஆசாமி எப்போதும் போதையில் இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நம்ம ஊரில் போதை ஏற வேண்டும் என்று பலரும் டாஸ்மாக் கடைகளில் முகாமிடுவது வழக்கம். கடை திறக்கப்படும் முன்பு இருந்தே இதற்காக டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டிருப்பார்கள்.

மது குடித்தும் போதை ஏறாத அசாமிகள் ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை முயல்வார்கள். அப்படித்தான் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஏதேதோ செய்தும் போதை ஏறாமல் கடைசியில் வினோதமான ஒன்றைச் செய்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ளவர்கள் இதுபோல போதைக்காக சில விசித்திரமான விஷயங்களை முயல்வார்கள். இருமல் சிரப், விலங்குகளின் விஷம், குறிப்பிட்ட வகை சீஸ் ஆகியவற்றை கூட போதைக்காக இவர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த நபர் அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். எப்போதும் போதையில் இருக்க அவர் செய்த காரியம் இணையத்தை வாயடைக்கச் செய்துவிட்டது.
போதை தேவை: போதைக்காக அந்த இளைஞர் தனது மண்டை ஓட்டில் துளையிட்டுள்ளார். பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஜோ மெல்லன். இவர் எல்.எஸ்.டி சோதனைகளில் முன்னோடியாக இருந்தார். அவர் 1960களில் பார்ட் ஹியூஸ் என்ற டச்சு கல்வியாளரிடமிருந்து ட்ரெபனேஷன் எனப்படும் ஒரு பழங்கால செயல்முறையைக் குறித்து அறிந்துள்ளார். அதைச் செயல்படுத்தவும் அவர் முயன்றுள்ளார். இதை அவர் தனது புத்தகத்திலும் எழுதியுள்ளார்.
ட்ரெபனேஷன் அல்லது ட்ரெபானிங் என்பது மனிதக்குலம் அறிந்த பழமையான அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் அவர் மூன்றாவது முறை தான் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக 1967ஆம் ஆண்டில் அவரே தனது மண்டை ஓட்டையைத் துளையிட்டுக் கொண்டார்.
முதல் முயற்சி: தனது முயற்சி குறித்து அவர் 2016இல் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், "அந்த நேரத்தில் எனக்குச் சுத்தமாகக் காசு இல்லை. என்னால் மின்சார டிரில் எதுவும் வாங்க முடியவில்லை. இதனால் மெடிக்கல் கடைக்குச் சென்று கையடக்க கருவி ஒன்றை வழங்கினேன். அதை வைத்து எனது தலையை நானே துளையிடத் தொடங்கினேன்.
இது மண்டை ஓட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மெல்ல அதை கையால் நாம் ஆப்ரேட் செய்ய வேண்டும். அப்போது தலையில் துளை ஏற்படத் தொடங்கியது. சொல்வதற்கு இது ஈஸி போல இருக்கலாம்.. ஆனால், உண்மையில் இது ரொம்பவே கஷ்டமான செயல்முறை. ஒயின் பாட்டிலை உள்ளே இருந்து திறப்பதற்குச் சமமானது. என்னால், இதில் வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை.
அடுத்து அதே ஆண்டில் இதே முறையைப் பயன்படுத்தி மீண்டும் முயன்றேன். இரண்டாம் முறையும் அது தோல்வியில் முடிந்தது. இதில் வெற்றி பெற்றுவிடலாம் என்றே நினைத்தேன். ஆனாலும் முடியவில்லை. சில ஆண்டுகள் இடைவெளி விட்டு 1970இல் மூன்றாவது முறையாக முயன்றேன். இந்த முறை எனக்கு கையில் கொஞ்சம் காசு இருந்தது. இதனால் நான் எலக்ட்ரிக் டிரிலை பயன்பத்தினேன். இந்த முறை என்னால் வெற்றிகரமாகத் துளையிட முடிந்தது.
வெறும் 30 நிமிடங்கள்: இதில் வெறும் 30 நிமிடங்களில் அனைத்தையும் செய்து முடித்துவிட்டேன். வெற்றிகரமாக முடித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் என்னால் அந்த மாற்றத்தை உணர முடிந்தது. எனது எடை எல்லாம் மாயமானது போல இருந்தது. நான் மிகவும் லைட்டாக உணர்ந்தேன்" என்று அவர் கூறியிருந்தார்.
இதுபோல அவர் தனது தலையில் துளையிட முயன்ற முயற்சியைத் தொகுத்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரேக்கிங் கன்வென்ஷனில் என்ற 2015 நிகழ்விலும் இது குறித்து விரிவாக விளக்கியிருந்தார் இதனிடையே இது இப்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications