பார்த்தீங்களா! எலிசபெத் மரண செய்தி வந்ததும்.. வானத்தில் நடந்த மாற்றம்! பார்த்ததும்.. உருகிய மக்கள்
லண்டன்: ராணி எலிசபெத் மரணம் அடைந்த நிலையில் பக்கிம்ஹாம் பேலஸ் வெளியே மக்கள் குவிந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யுனைட்டட் கிங்கிடமின் ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக பக்கிம்ஹாம் பேலஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வயதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ராணி எலிசபெத் உடல்நிலை இன்று மோசமானது.
இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன் அவர் காலமானார்.
இவர் 70 வருடமாக அங்கு ராணி பதவியில் இருந்தார். அங்கு நீண்ட காலம் ராணி பதவியில் இருந்தவர் எலிசபெத் IIதான். இவருக்கு 96 வயது ஆகிறது.

எலிசபெத்
எலிசபெத் உடல்நிலை சரியில்லை என்றவுடன் அவர் இருந்த மருத்துவமனையை நோக்கி மக்கள் பலர் செல்ல தொடங்கினார்கள். பலமோரல் பகுதியில் உள்ள மருத்துவமனையில்தான் எலிசபெத் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் இருந்த மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டமாக கூட தொடங்கினார்கள். இன்னொரு பக்கம் அதிகார்பூர்வமாக செய்தி வரும் முன்பே எலிசபெத் மரணம் அடைந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் மக்கள் பலர் விண்ட்சோர் கேஸ்டல் பகுதிக்கு சென்றனர்.

விண்ட்சோர் கேஸ்டல்
விண்ட்சோர் கேஸ்டல் பகுதியில்தான் மகாராணியின் வீடு இருக்கிறது. இன்னும் பலர் பக்கிம்ஹாம் பேலஸ் வெளியே கூட தொடங்கினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு மக்கள் குவிந்து இருந்த நிலையில் பக்கிம்ஹாம் பேலஸின் அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. ராணி எலிசபெத் மரணம் அடைந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த மக்கள் கண்ணீர்விட்டு இரங்கல் தெரிவித்தனர்.

குளிர்ச்சியான வானிலை
சில மணி நேரங்களுக்கு முன்புதான் அங்கு மழை பெய்தது என்பதால் குளிர்ச்சியான வானிலை காணப்பட்டது. இந்த நிலையில்தான் அங்கு திடீரென வானவில் தோன்றியது. சரியாக பக்கிம்ஹாம் பேலஸ் வானவில் ஒன்று அங்கு தோன்றியது. இதை பார்த்ததும் அங்கு இருந்த மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கோஷமிட்டனர். ஒருவரின் மரணத்தின் போது இப்படி வானவில் தோன்றுவது தொடர்பாக ஆங்கிலேயே மக்களிடையே பல நம்பிக்கைகள் உள்ளன.

வானவில்
அதில் முக்கியமான நம்பிக்கை வானவில் ஒருவர் இறந்த நாளில் தோன்றினால் அதன் அர்த்தம் அந்த நபர் சொர்க்கம் செல்வார் என்பதாகும். அதே சமயம் இந்த இழப்பு ஈடுகட்டப்படும். ஒரு புதிய நல்ல தொடக்கத்தின் அடையாளம்தான் இந்த வானவில் என்ற நம்பிக்கையும் ஆங்கிலேயே மக்கள் இடையே உள்ளது. புதிய நம்பிக்கையின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு திடீரென தோன்றிய வானவில் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications