வரலாறு காணாத தோல்வி.. மெகா சிக்கலில் ரிஷி சுனக்.. பிரதமர் பதவியே போய்விடும் போலயே.. ரொம்ப மோசம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் ஆளும் ரிஷி சுனக் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. இது அவரது பிரதமர் பதவியையே காலி செய்யும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்தாண்டு பிரிட்டனில் சில வார இடைவெளியில் இரண்டு பிரதமர்கள் விலகிய நிலையில், அப்போது அங்கே அரசியல் ரீதியாக மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

 Why its problem for Rishi Sunak as his Conservative Party faced Historic defeats

இளம் வயது பிரதமர், முதல் இந்து பிரதமர் எனப் பல சிறப்புகளை இவர் பெற்றார். பிரிட்டன் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், அதைச் சரி செய்ய ரிஷி சுனக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

ரிஷி சுனக்: பிரிட்டனில் இப்போது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு பொருளாதார சூழல் நிலவுகிறது. இதனால் அங்கே ஆளும் அரசு மீது மக்களிடையே மிகப் பெரிய கோபம் நிலவுகிறது. அதுவே இப்போது ரிஷி சுனக்கிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இது அவ்வப்போது அங்கே நடக்கும் இடைத்தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. ஆளும் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

கன்சர்வேடிவ் கட்சி வலுவாக உள்ளதாகக் கருதப்படும் இடங்களிலேயே இப்போது அவர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தல்களில் கடந்த 4 முறை தொடர்ந்து வென்ற கன்சர்வேடிவ் கட்சியால் இப்போது இடைத்தேர்தலில் கூட வெல்ல முடியவில்லை. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. அதேநேரம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்குச் செல்வாக்கு மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.. இதே நிலை நீடித்தால் 2010க்குப் பிறகு முதல்முறையாக அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடும்.

படுதோல்வி: லண்டனுக்கு வடக்கே உள்ள மிட்-பெட்ஃபோர்ட்ஷையர் என்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுள்ளது. 1945க்குப் பிறகு இடைத்தேர்தலில் கட்சி கன்சர்வேடிவ் கட்சி அடைந்த மாபெரும் தோல்வி இதுவாகும். அதேபோல மத்திய இங்கிலாந்தில் கிராமப்புறத்தில் அமைந்துள்ள கன்சர்வேடிவ் கோட்டையாகக் கருதப்பட்ட டாம்வொர்த்தில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது தொழிலாளர் கட்சியினருக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

43 வயதான ரிஷி சுனக் தன்னை ஒரு துணிச்சலான சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொள்கிறார். பிரிட்டனின் பொருளாதார சூழலைச் சரி செய்யத் துணிச்சல் கொண்ட ஒரே நபர் என்பது போலத் தன்னை காட்டிக் கொள்கிறார். அது தனிப்பட்ட முறையில் அவருக்கான ஆதரவு அதிகரிக்க உதவுகிறது என்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குப் பெரியளவில் உதவுவதில்லை. அதிக பணவீக்கம், பொருளாதார மந்த நிலையில், எனப் பல காரணங்களால் ஆளும் தரப்பு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

எதிர்ப்பு அதிகம்: அங்கே அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போதைய சூழலைப் பார்த்தால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கே வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. ரிஷி சுனக் கட்சியுடன் ஒப்பிடுகையில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு மிக அதிகமாக இருக்கிறது. இதுவே இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதேநேரம் ஆளும் தரப்பிற்கு எப்போதும் இடைத்தேர்தல் சிக்கலாகவே இருக்கும் என கன்சர்வேடிவ் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.

இருப்பினும், தொழிலாளர் கட்சி இதை ஏற்க மறுக்கிறார்கள். மக்கள் மாற்றத்திற்குத் தயாராகி விட்டதாகும் அடுத்தாண்டு தேர்தலில் அது தெரியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிரிட்டனில் சமீப காலத்தில் 12 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. அதில் ஒரே ஒரு இடைத்தேர்தலில் மட்டுமே கன்சர்வேடிவ் கட்சி வென்றுள்ளது. மற்ற அனைத்திலும் எதிர்க்கட்சியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை நிலை தொடர்ந்தால் அவரது பிரதமர் பதவியே அடுத்தாண்டு காலியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+