லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் இந்தியா.. ஓமிக்ரான் பரவலுக்கு இடையே பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன கெவின் பீட்டர்சன்.. ஏன்?

Google Oneindia Tamil News

லண்டன்: தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா பரவும் நிலையில் ட்விட் ஒன்றில் இந்திய பிரதமர் மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரும், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான, கெவின் பீட்டர்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் ஓமிக்ரான் காரணமாக யாரும் மரணிக்கவில்லை என்றாலும் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.

 கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

இதனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பயண கட்டுப்பாடு

பயண கட்டுப்பாடு

இந்த நிலையில் உலக நாடுகள் பல தென்னாபிரிக்க மக்களுக்கு கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமெரிக்கா, ஐரோப்பா, யு.கே, இஸ்ரேல் போன்ற வளர்ந்த நாடுகளில் விதிக்கப்பட்டுள்ளது. இதை தென்னாப்பிரிக்காவும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது.

தண்டிக்கிறார்கள்

தண்டிக்கிறார்கள்


உலக நாடுகள் தென்னாப்பிரிக்க மக்களை தண்டிக்கிறது. தென்னாப்பிரிக்க மக்களை குற்றவாளிகள் போல இந்த உலகம் நடத்துகிறது. நாங்கள்தான் மிக விரைவாக ஓமிக்ரான் குறித்து அறிவித்தோம். ஆனால் அதற்காக எங்கள் மீதே கட்டுப்பாடுகளை விதித்து எங்களை உலக நாடுகள் குற்றவாளிகள் போல தண்டிக்கிறது என்று தென்னாப்பிரிக்கா சமீபத்தில் புலம்பி இருந்தது.

நிறவெறி

நிறவெறி

கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நிறவெறிக்கு நிகரான கட்டுப்பாடுகள் காட்டப்பட்டு வருகின்றது. அதிலும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல ஏழை நாடுகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று இந்தியா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தென்னாப்பிரிக்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது. ஓமிக்ரான் கொரோனா பரவலில் தென்னாப்பிரிக்காவிற்கு துணையாக இந்தியா இருக்கும்.

இந்தியா துணை

இந்தியா துணை

அவர்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம். இந்தியாவின் வேக்சின்களை ஏற்றுமதி செய்வது தொடங்கி மருந்துகள் அனுப்புவது வரை அனைத்து உதவிகளும் தயாராக உள்ளது. நேரடியாகவே அல்லது கோவாக்ஸ் வழியாகவோ நாங்கள் உதவ தயார். டெஸ்ட் கிட், கிளவுஸ், பிபிஇ கிட்ஸ் என்று அனைத்தையும் வழங்கி தேவையான நேரத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை குறிப்பிட்டு இருந்தது.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil
    வேக்சின் ஏற்றுமதி

    வேக்சின் ஏற்றுமதி

    இந்த செய்தியை பகிர்ந்த தென்னப்பிரிக்காவில் பிறந்தவரும், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான, கெவின் பீட்டர்சன், இதுதான் இந்தியா.. இந்தியா இன்னொருமுறை தங்களின் அக்கறையை வெளிப்படுத்தி உள்ளது. நல்ல இதயம் படைத்த மக்களை கொண்ட சிறப்பான நாடுதான் இந்தியா! மிக்க நன்றி! என்று கூறி பிரதமர் மோடியை பீட்டர்சன் டேக் செய்துள்ளார். இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு உதவும் செய்தியை பகிர்ந்து கெவின் பீட்டர்சன் நன்றி கூறியுள்ளார்.

    English summary
    Why Former crickter Kevin Pietersen Thanks India PM Modi amid Coronavirus Omicron outbreak in South Africa?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X