மாசம் 4 லட்சம் சம்பளம்.. நிறைய லீவ் வேற.. ஆனாலும் யாருமே இந்த வேலைக்கு வருவதில்லையாம்.. ஏன் தெரியுமா
சலுகைகள் பல கொட்டி கிடந்தாலும் இந்த வேலையில் சேர யாருமே ஆர்வம் காட்டுவதில்லை.
லண்டன்: கை நிறைய சம்பளம், நாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்யலாம் என்று பல்வேறு சலுகைகள் கொட்டி கிடந்தாலும் கூட இந்த ஒரு வேலைக்கு சேர யாருமே ஆர்வம் காட்டுவதில்லையாம். அது என்ன வேலை.. ஏன் யாருமே சேர ஆர்வம் காட்டவில்லை என்பதை பார்க்கலாம்.
கை நிறைய சம்பளம், அதை தாண்டி பல சலுகைகள், வேலைப் பாதுகாப்பு.. இந்த மூன்றும் தான் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு கனவு வேலை. இங்கு அனைவருமே இதுபோன்ற ஒரு வேலைக்கு தான் தங்கள் வாழ்க்கை முழுக்க காத்திருக்கிறார்கள்.
இப்போது அப்படிதான் நாளுக்கு 36 ஆயிரம் ரூபாய் அதாவது.. மாசம் 4 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனாலும், பாருங்க.. இந்த அறிவிப்பு வந்தாலும், இந்த வேலையில் சேர யாருமே ஆர்வம் காட்டவில்லையாம்.

4 லட்சம் சம்பளம்
யாருமே வேலைக்கு சேர முன்வராததால்.. இன்னுமே இந்த வேலை காலியாக தான் இருக்கிறதாம். இந்த வேலையில் சுற்றுலா செல்லவும் பணம் தருகிறார்கள்.. மேலும், நாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்யலாம். இது மட்டுமில்லாமல், முக்கியமாக சம்பளம் மட்டும் தினசரி 36 ஆயிரம்.. அதாவது மாதம் 4 லட்சம் கொடுக்கிறார்கள்.. படிப்பதற்கே கனவு போல இருக்கிறதல்லவா? ஆனால், இது உண்மைதான்.. இப்படியொரு வேலை இருக்கவே செய்கிறது. ஆனாலும், இந்த வேலைக்கு யாருமே இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்பது பெரிய ஆச்சரியம் தான்.

ஆர்வம் இல்லை
இப்போது உலகெங்கும் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. டாப் நிறுவனங்களும் கூட பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இதனால் அவர்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் தான் இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 4 லட்சம் சம்பளம் கொடுக்கும் இந்த வேலைக்கு யாருமே சேராதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.

என்ன வேலை
இதில் தேர்வாகும் நபர்கள் எங்கு வேலை செய்ய வேண்டும் தெரியுமா.. ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடற்கரைக்கு சற்று தொலைவில் இருக்கும் வடக்கு கடலில் தான் வேலை செய்ய வேண்டும். அங்கு நடுக்கடலில் அமைந்துள்ள ஒரு கடல் ரிகர் வேலைக்கு ஆளை நிரப்பவே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. நடுக்கடலில் அமைந்துள்ள இந்த ஆப்ஷோர் என்பது தண்ணீரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டுமானமாகும்... இங்கு தான் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுத்து, சுத்திகரிக்கப்பட்டு, சேமிக்கப்படுகிறது.

ஒரு கோடி ரூபாய் வரை
இந்த வேலை நிலைக்கு தேர்வாகும் நபர்கள்.. ஆறு மாதங்களுக்கு கடலுக்குள் இந்த ஆப்ஷோருக்கு அனுப்பப்படுவார்கள். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய இவர்களுக்கு ₹36,000 சம்பளம் வழங்கப்படுகிரது. இத்துடன் விடுறைக்கு என்று தனியாக 3,877 ரூபாயும்.. ஒரு வாரம் விடுமுறையையும் வழங்குகிறது. அவர் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தால்.. சம்பளம் சுமார் 1 கோடி வரை செல்கிறது. உளகிலேயே எரிசக்தி சந்தையில் டாப் இடத்தில் இருக்கும் நிறுவனமே இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன தெரிந்திருக்க வேண்டும்
அதேநேரம் யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்ய முடியாது. சில அடிப்படை படிப்பை முடித்தவர்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அடிப்படை கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர பயிற்சி, கடல்சார் அவசர பயிற்சி உள்ளிட்ட சில அடிப்படை பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல மருத்துவப் பயிற்சியுடன் இதர தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஏன் ஆர்வம் இல்லை
இது அத்தனையும் முடித்திருந்தால் எளிதாக வேலைக்கு செலக்ட் ஆகிவிடலாம். இருந்த போதிலும் இந்த வேலைக்கு சேர யாருமே முன்வருவதில்லையாம்.. உறையும் பனி, கிட்டதட்ட தனிமையில் வேலை போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் இதில் இருந்து தள்ளியே இருக்கிறார்கள். இருப்பினும், எந்த வேலையாக இருந்தாலும் செய்ய நாங்க ரெடி என்று இணையத்தில் கருத்துகளை தெறிக்க விடுகிறார்கள் விஐபி நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications