"பெரிய இடி.." வெறுப்பின் உச்சத்தில் ரிஷி சுனக்.. இப்படி ஆகிடுச்சே! அடுத்து என்ன செய்ய போகிறார்
லண்டன்: பிரிட்டன் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு கொண்டு வர ரிஷி சுனக் போராடி வருகிறார். இருப்பினும், சில காலமாக இப்போது அங்கே நடக்கும் சம்பவங்கள் ரிஷி சுனக்கிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு பிரிட்டன் பொருளாதாரத்திற்கு மிக மோசமான ஆண்டாக இருந்தது. வரிசையாக இரண்டு பிரதமர்கள் விலகியது தொடங்கிப் பல காரணங்கள் பிரிட்டன் பொருளாதாரத்தை மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளியது.

குறிப்பாக லிஸ் டிரஸ் பிரதமராக இருந்த போது அவர் எடுத்த சில நடவடிக்கை பொருளாதாரத்தை மிகவும் இக்கட்டான ஒரு சூழலுக்குத் தள்ளியது. இதனால் லிஸ் டிரஸ் வெறும் சில வாரங்களில் ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார்.
பிரிட்டன் பொருளாதாரம்: அதன் பிறகு பிரிட்டன் பொருளாதாரக்கை மீண்டும் தூக்கி நிறுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொருளாதாரமும் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும், ரிஷி சுனக் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். கடந்த வாரம் பிரிட்டன் பிரதமரின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் போது ரிஷி சுனக் டென்ஷன் ஆனதாகக் கூறப்படுகிறது.
அதாவது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசியலைத் தாண்டி சில கடினமான முடிவுகளை எடுக்கும் போதிலும், அதற்கான பாராட்டும் பெருமையும் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று பிரதமர் ரிஷி சுனக் புலம்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், லிஸ் ட்ரஸ் இங்கிலாந்து பொருளாதாரத்தைப் பேரழிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்த நிலையில், அங்கிருந்து பொருளாதாரத்தை மீட்டு, பணவீக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் அதற்கான பெயர் அரசுக்குக் கிடைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.
விரக்தியில் ரிஷி: எப்போதும் பொதுவெளியில் உற்சாகம் குறையாமல் இருப்பதே ரிஷி சுன் ஸ்டைல். ஆனால், இந்த அரிய நிகழ்வில் அவர் புலம்பி இருக்கிறார். பிரிட்டன் பொருளாதாரம் தொடர்ச்சியாகப் பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் நிலையில், பிரிட்டன் பெரும் மந்தநிலை நோக்கிச் செல்லும் நிலையில், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தச் சம்பவம் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரிஷி சுனக் காலநிலை மாற்றப் பிரச்சினைக்கு போதிய கவனம் தர மறுப்பதாகக் கூறி அவரது அமைச்சரவையில் உள்ள காலநிலை அமைச்சர் ராஜினாமா செய்திருந்தார். இது தவிர வேறு சில பிரச்சினைகளையும் அவர் எதிர்கொண்டுள்ளார். விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டன் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறனர். இது அங்கு நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
என்ன காரணம்: சமீபத்திய கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு 22% மக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. அதேநேரம் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சிக்கான ஆதரவு 40% தாண்டிவிட்டது. இரு கட்சிக்கும் இடையேயான இடைவெளி மட்டும் கடந்த மூன்று வாரங்களில் 16இல் இருந்து 22%ஆக உயர்ந்துள்ளது. கருத்துக்கணிப்பு இப்படி இருக்கும் நிலையில், அங்கே தேர்தல் நடந்தால் ரிஷி சுனக் கட்சி வெல்வது கடினம்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடிப்படையிலேயே ஒரு நல்ல மனிதர் என்றும் எந்தவொரு பெயரும் கிடைக்காது என்று தெரிந்த போதிலும் அவர் நாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளையே எடுத்து வருவதாக அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். கொரோனாவால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டு வரும் நிலையில், இதே சூழலே தொடரும் என்று மற்றொரு பிரிட்டன் அமைச்சர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வாக்கு: பணவீக்கத்தைக் குறைப்பது, பொருளாதாரம் வளர்ச்சி, கடனைக் குறைப்பது, தேசிய சுகாதாரச் சேவையை மேம்படுத்துவது, முறைகேடாக நாட்டில் நுழைவோரைத் தடுப்பது எனத் தான் அளித்த 5 வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றியுள்ளேன் என்பதைப் பொறுத்து மக்கல் தனது ஆட்சிக்கு மார்க் போடலாம் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மக்கள் எதை வைத்து வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். இதே டிரெண்ட் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் ரிஷி சுனக் வெல்வது சந்தேகமே...












Click it and Unblock the Notifications