வினேஷ் போகத் அப்பீல் வழக்கு என்னாச்சு.. ஒலிம்பிக் சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் சொல்வது என்ன?
லண்டன்: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் இருந்தது தெரிய வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டில் தீர்ப்பு எப்போது வரும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த போட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 5-0 என்ற கணக்கில் வினேஷ் போகத் அசத்தல் வெற்றியை பெற்றார்.

இதனால், இந்தியர்கள் பதக்க கனவுடன் காத்திருந்த நிலையில், அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியானது. ஒட்டு மொத்த தேசமும் வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தை ஏந்தும் தருணத்தை காத்திருந்த நேரத்தில், எடை கூடுதலாக இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அவரது கனவு தகர்ந்தது. இதைத் தொடர்ந்து பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன் தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கையை வினேஷ் போகத் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 'முதல் நாள் போட்டியில் அவரது உடல் எடை விதிமுறைக்குட்பட்டே இருந்தது. தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை கூடியதே தவிர அவர் இதில் மோசடி செய்யவில்லை' என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக அனபெல் பெனட் (ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று இரவு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்ககப்பட்டது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு நேற்று நீதிபதி அனபெல் பெனட் (ஆஸ்திரேலியா) முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டாலும், வரும் 13-ந் தேதி தான் வெளியாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதாவது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் தீர்ப்பு விவரம் அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்தே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வினேஷ் போகத் வைத்த கோரிக்கை படி வெள்ளி பதக்கத்தை பகிர்ந்தளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications