பாத்ரூம் ஓட்டையிலும் கேமரா.. சைக்கோவின் பிடியில் மனைவி.. நடுரோட்டிலேயே விழுந்த பிணம்.. கொடூரம்

மனைவியை நடுரோட்டில் வெட்டி கொன்றுவிட்டார் மாஜி கணவர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பட்டப்பகலில் ஒருபெண்ணை வெட்டி கொன்றுவிட்டார் அவரது மாஜி கணவர்.. 3 வருடங்கள் கணவனுக்காக பயந்து பயந்து வாழ்ந்து வந்த நிலையில், நடுரோட்டிலேயே பெண்ணின் உயிர் பரிதாபமாக பிரிந்தது..

இங்கிலாந்து தலைநகர் இப்படி ஒரு பயங்கரம் நடந்துள்ளது.. அந்த பெண்ணின் பெயர் யாஸ்மின் வாபா.. 43 வயதாகிறது.. வட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.. லண்டனில் வசித்து வந்துள்ளார்.. 16 மற்றும் 18 வயதில் 2 மகன்கள் யாஸ்மினுக்கு இருக்கிறார்கள்..

இவருக்கு திருமணமான நிலையில், கணவனை பிரிந்து விட்டார். எனினும், விதிவசத்தால் மறுபடியும் முன்னாள் கணவரான லியோன் என்பவருடனே ஒன்றாக வசித்து வந்தார்.. ஆனால், அந்த கணவர் ஒரு சைக்கோ பேர்வழியாம்.. எப்ப பார்த்தாலும் மனைவியை சந்தேகப்படுவாராம்.. ஒருநாள் கூட நிம்மதி இல்லாமல் யாஸ்மின் தவித்துள்ளார்..

பாத்ரூம்

பாத்ரூம்

மனைவியின் நடத்தையை தெரிந்து கொள்வதில், அதீத அக்கறையை கணவர் எடுத்து கொள்வார்.. வீட்டிலுள்ள பாத்ரூமிலும் கேமரா வைத்துள்ளார்.. பெட்ரூமிலும் கேமரா வைத்துள்ளார்.. வீட்டிற்குள்ளேயே அந்த பெண்ணால் இயல்பாக நடமாட முடியாத அளவுக்கு டார்ச்சர் செய்துள்ளார். இதையெல்லாம் யாஸ்மின், தன்னுடைய தோழிகளுக்கு போனை போட்டு புலம்பி அழுவாராம்..

 சந்தேகம்

சந்தேகம்

ஒருகட்டத்தில் தோழிகளிடம் போனில் பேச முடியாத சூழலும் யாஸ்மினுக்கு வந்துள்ளது.. அதனால், மெசேஜ் அனுப்பி அதில் தன்னுடைய கணவனை பற்றி சொல்வார்.. கடைசியாக தன்னுடைய தோழிக்கு அனுப்பிய மெசேஜிலும், வீடு முழுக்க லியோன் கேமராவை வெச்சிருக்கான்.. பல மாசமாக என்னையே கண்காணிக்கிறான்.. ஒன்றுவிடாமல் ரிக்கார்ட் செய்றான்.. என்னுடைய இ-மெயில், மொபைலில் உள்ள எல்லா டேட்டாவையும் திருடிவிட்டான்.. அநேகமாக என்னை கொலை செய்தாலும் செய்துவிடுவான்" என்றெல்லாம் புலம்பி வைத்துள்ளார்..

சந்தேகம்

சந்தேகம்

2 வருடம் படாதபாடு பட்டு, அதற்கு பிறகு யாஸ்மின் முதல்கணவனை விட்டு ஒருவழியாக பிரிந்தார்.. ஆனாலும், லியோன் குறித்த பயம் அவரை விடவேஇல்லை.. எப்போது வேண்டுமானாலும் லியோன் தன்னை தேடி வந்துவிடுவான், கொலை செய்துவிடுவான் என்று நடுங்கி கொண்டே இருந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், யாஸ்மின் சம்பவத்தன்று சாலையில் சென்று கொண்டிருந்தார்.. இதை எப்படியோ கண்டுபிடித்துவிட்டு, லியோன் வந்துவிட்டார்.. யாஸ்மினை நடுவழியிலேயே மடக்கி, வெட்டி கொலை செய்துவிட்டார்.. இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

பட்டப்பகலிலேயே, அதுவும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பாதையிலேயே ஒரு பெரிய கத்தியுடன் வந்து கொலை செய்துள்ளார் லியோன்... அவரை அந்த சமயத்தில் யாராலும் தடுக்க முடியவில்லையாம்.. கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக இருந்ததால், அருகில் செல்ல அங்குள்ள பொதுமக்கள் பயந்துள்ளனர்.. இறுதியில், யாஸ்மின் உறவினர் ஒருவர், காரை வேகமாக ஓட்டிவந்து அவர் மீது மோதி, அதன்பிறகு அவரை தடுக்க முயன்றிருக்கிறார்.. கார் மோதியதில் லியோன் அங்கேயே இறந்துவிட்டார்..

பரிதாபம்

பரிதாபம்

ஆனால் அந்த கார், கத்தியால் குத்தப்பட்ட யாஸ்மின் மீதும் ஏறி இறங்கி நின்றது.. காரை ஏற்றி லியோனை கொன்ற அந்த நபரை கைது செய்யக்கூடாது என்று உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.. "ஒரு மிருகத்தை கொன்றவன் தியாகி, அவர் மீது சட்டநடவடிக்கை கூடாது, விருது தந்து கவுரவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கிறார்கள்.. எப்படியோ, விவாகரத்து பெற்று 3 வருடங்கள் பயந்து பயந்தபடியே வாழ்ந்து வந்துள்ளார் யாஸ்மின்.. எதற்காக இத்தனை நாளும் அவர் நடுங்கி கொண்டிருந்தாரோ, அது கடைசியில் நடந்துவிட்டது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+