கணவர் ஏமாத்திட்டாரு.. ஆனா அவரோட ரகசிய காதலியின் கணவர் மீது எனக்கு லவ் வந்துடுச்சு! பெண் புலம்பல்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இளம் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இது தொடர்பாகப் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நமது நாட்டை காட்டிலும் வெளிநாடுகளில் திருமணம் என்பது மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். இந்தியாவைக் காட்டிலும் விவாகரத்துகளும் அங்கு அதிகம் நடக்கும்.
இதற்கிடையே பிரிட்டன் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். உறவுச் சிக்கல் அங்கு எந்தளவுக்கு உள்ளது என்பதை அது காட்டுகிறது.

இளம் பெண்
பிரிட்டனைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு வயது 36. அவரது கணவருக்கு வயது 38 ஆகிறது. இந்தத் தம்பதிக்கு 6 வயதில் அழகிய சுட்டி பெண் குழந்தையும் இருக்கிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு, இந்த பெண்ணுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்து உள்ளது. அதாவது அந்தப் பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்து உள்ளார். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

தொடர்பு
அதாவது தன்னுடன் பணிபுரியும் 30 வயதான பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்து உள்ளார். இதை அவரால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதேநேரம் இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னவரே அந்த 30 வயது பெண்ணின் கணவர் தான்.

சீக்ரெட் உறவு
மேலும், இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஸ்கிரீன் ஷாட்களையும் அவர் அனுப்பி உள்ளார். மேலும், எப்போதெல்லாம் எந்த ஹோட்டல்களில் அவர்கள் தனிமையில் இருந்து உள்ளனர் என்பது குறித்த தகவல்களையும் அந்த கணவர் ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு அனுப்பி உள்ளார். தனது கணவரின் மெசேஜ் அனுப்பும் ஸ்டைலை பார்த்த உடனே தனது கணவர் தன்னை ஏமாற்றுவதைப் புரிந்து கொண்டார்.

இக்கட்டான சூழல்
இதையடுத்து அந்த பெண், தனது கணவர் தொடர்பில் இருக்கும் பெண்ணின் கணவரை நேரில் சந்தித்து உள்ளார். தனது நிலைமையையும் விளக்கி உள்ளார். அதாவது கொரோனா காலத்தில் தனக்கு வேலை போய் விட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் இப்போது தனது கணவரை விவாகரத்து பெற்றால் குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

பழக்கம்
ஏமாற்றிய பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளது. எனவே, அவரும் சூழலைப் புரிந்து கொண்டு உள்ளார். எனவே, கொஞ்சக் காலத்திற்கு தங்கள் துணைகளின் ரகசிய உறவு குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என்று இருவரும் முடிவு செய்து உள்ளனர். இடைப்பட்ட காலத்தில் இருவரும் அவ்வப்போது மெசேஜ் செய்தும், ஃபோன் செய்தும் பேசி வந்து உள்ளனர். பின் அது அப்படியே திரைப்படம், காபி குடிக்க வெளியே செல்வது என மாற தொடங்கி உள்ளது.

காதல்
துணைகளின் செயல்பாடுகள் பற்றி மட்டுமே இருந்த பேச்சு என்பது மாறி, அந்த விவகாரத்தையே இவர்கள் எடுப்பதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள ஆரம்பித்து உள்ளனர். இந்தச் சூழலில் தான் சில வாரங்களுக்கு முன்பு, அந்த நபர் இந்த பெண்ணிடம் காதலிப்பதாகத் தெரிவித்து உள்ளார். அதேநேரம் இது உண்மையான காதல் உணர்வா இல்லை இருவரும் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட உணர்ச்சியா என்று தெரியவில்லை என்றும் கூறி உள்ளார்.

புலம்பல்
இதையெல்லாம் கேட்டு அந்த பெண்ணுக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் இந்த பெண்ணுக்கும் அவர் மீது காதல் உணர்வு ஏற்பட்டு உள்ளது. ஆனால், இருவரும் தங்கள் துணைகளிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், இந்த உணர்வு தொடருமா இல்லை பிரச்சினைகளால் வரும் வெற்று உணர்வா என்று புரியாமல் அந்த பெண் குழப்பத்தில் உள்ளதாக ரெட்டிட் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.












Click it and Unblock the Notifications