லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு கேன்சர் வந்திருக்கு.. கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்ப நினைத்து நோயாளிகளை அலறவிட்ட ஆஸ்பத்திரி!

Google Oneindia Tamil News

லண்டன்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூற நினைத்து நோயாளிகளுக்கு உங்களுக்கு நுரையீரல் கேன்சர் இருப்பதாக கூறி இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை நோயாளிகளை அலற வைத்துள்ளது.

அதுவும் 8 ஆயிரம் நோயாளிகளுக்கு இப்படி ஒரு குறுந்தகவலை தவறுதலாக அனுப்பி கிறிஸ்துமஸ் தினத்தின் போது மன உளைச்சலுக்கு நோயாளிகளை தள்ளியிருக்கிறது.

அதன்பிறகே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்துருச்சு- பணமதிப்பிழப்பு நாள் என கொண்டாடுங்களேன்..பாஜக மீது ஓவைசி அட்டாக் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்துருச்சு- பணமதிப்பிழப்பு நாள் என கொண்டாடுங்களேன்..பாஜக மீது ஓவைசி அட்டாக்

தனிப்பட்ட முறையில் வாழ்த்து

தனிப்பட்ட முறையில் வாழ்த்து

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் போது சில நிறுவனங்கள் மொத்தமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்புவது வழக்கம். வங்கிகள் உள்ளிட்ட நிதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்திகள் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. பிறந்த நாளின் போது கூட தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்து மெசேஜ்கள் கூட இதுபோன்ற நிறுவனங்கள் அனுப்புவதை பார்த்திருப்போம்.

இடி விழுந்தது போல

இடி விழுந்தது போல

இதே பாணியில் தான் இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையின் நோக்கம் நன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் செய்த சிறிய அலட்சியம் சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் தலையில் பெரும் இடி விழுந்தது போல மாறியிருக்கிறது. அது ஏன் என்ற விவரத்தை பார்ப்போம்.

என்ன மெசேஜ் என்று பார்த்த நோயாளிகள்

என்ன மெசேஜ் என்று பார்த்த நோயாளிகள்

இங்கிலாந்தின் தெற்கு யார்க்‌ஷைர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நோயாளிகள் அனைவருக்கும் மொத்தமாக ஒரு மெசேஜ்ஜையும் தட்டி விட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தவர்கள் என பலரும் மருத்துவமனை ஏதோ மெசேஜ் அனுப்புகிறதே என்று பார்த்து இருக்கிறார்கள்.

பலருக்கும் வியர்த்து கொட்டிவிட்டது

பலருக்கும் வியர்த்து கொட்டிவிட்டது

அடுத்த நொடி பலருக்கும் வியர்த்து கொட்டிவிட்டது என்றே சொல்லலாம். ஏன் என்றால் உங்களுக்கு தீவிரமான நுரையீரல் கேன்சர் உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் உடல் நலக்குறைவு உள்ள நபர்களுக்கு கிடைக்கும் பலன்களை பெறுவதற்கான படிவமும் இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்து அனுப்புங்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மெசேஜ்ஜை பார்த்து பலரும் பதறிப்போய் மருத்துவமனைக்கு போன் செய்துள்ளனர். அப்போதுதான் மருத்துவமனை தனது தவறை உணர்ந்துள்ளது.

புத்தாண்டு வாழ்த்து என படியுங்கள்

புத்தாண்டு வாழ்த்து என படியுங்கள்

தங்களின் சிறிய தவறால் கிட்டதட்ட 8 ஆயிரம் நோயாளிகளை அலற வைத்து இருக்கிறது இந்த மருத்துவமனை. கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல நினைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கெடுத்து விட்டோமே என உணர்ந்த மருத்துவமனை பிறகு அனைவரிடம் மன்னிப்பு கோரி மெசேஜ் அனுப்பியிருக்கிறது. எங்கள் மெசேஜை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து என படியுங்கள் எனக் கூறி காலில் விழாத குறையாய் மன்னிப்பு கோரி அனுப்பியிருக்கிறது.

மன உளைச்சல் அடைந்த நோயாளிகள்

மன உளைச்சல் அடைந்த நோயாளிகள்

எனினும், முதல் மெசேஜை படித்து விட்டு பல நோயாளிகள் கடும் அச்சமும் உடைந்து போயும் இருக்கின்றனர். சில நோயாளிகள், ஏதேனும் தவறுதலாக வந்து இருக்கும் என்று ஆச்சர்யத்துடன் இருந்து இருக்கின்றனர். எது எப்படியோ புத்தாண்டு வாழ்த்து எனக்கூறி புத்தாண்டை திகில் அடைய வைத்துவிட்டதே என பல நோயாளிகளும் புலம்பாத குறைதான்..

English summary
A hospital in England has left patients screaming by telling patients you have lung cancer just in time for Christmas and New Year. It also mistakenly sent 8,000 patients such a distressing SMS, sending them into distress over Christmas Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X