Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடூரம்! சிறுமிக்கு வெறும் 6 வயசு தான்.. பலாத்காரம் செய்த 10 வயது சிறுவன்! வெலவெலத்து போன பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் அங்கு ஒட்டுமொத்த மாநிலத்தையே அதிரச் செய்து உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால் மைனர் சிறுவர்களே குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.. அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து இருக்கிறது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலம் படவுனில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த மைனர் சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிறுவனுக்கு வெறும் 6 வயது தான் ஆகிறதாம். இந்தச் சம்பவம் அங்கு மாநிலத்தையே அதிரச் செய்து இருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சிறுவன் பாதிக்கப்பட்ட சிறுமியைக் கால்நடைத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

பலாத்காரம்

பலாத்காரம்

அங்கு வைத்து சிறுமியை அவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துத் தெரிய வந்ததும் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ந்து போய்விட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சிறுவன் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அந்தச் சிறுவனைக் கைது செய்துள்ள போலீசார் இப்போது விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

அங்குள்ள உகைட்டி என்ற ஊருக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்து உள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அவர்களின் 6 வயது மகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அந்த கிராமத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன், சிறுமியைக் கால்நடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 பெற்றோர் புகார்

பெற்றோர் புகார்

பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். சிறுமி அழுது கொண்டே வீடு திரும்பி உள்ளார். சிறுமியின் ஆடைகளைப் பார்த்தும், அவரது பெற்றோருக்கு என்ன நடந்தது என்று புரிந்துவிட்டது. அவரிடம் பொறுமையாக என்ன நடந்தது எனக் கேட்ட போது, அவர் அழுது கொண்டே நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார். அதன் பின்னரே சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாகப் புகார் அளித்து உள்ளனர்.

 விசாரணை

விசாரணை


குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சிறுவனுக்கும் இப்போது 10 வயது தான் ஆகிறது. அவனைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். விசாரணைக்குப் பின்னர், சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+