12 வயது தான்.. கடைக்கு போன சிறுமி கூட்டு பலாத்காரம்.. பலியான சோகம்.. 3 பேருக்கு பாஜக அடைக்கலம்?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி கடைக்கு சென்றபோது ஏமாற்றி தூக்கிச்சென்று 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் குற்றவாளிகளுக்கு பாஜக அடைக்கலம் கொடுப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். மாநிலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார்.

இருப்பினும் கூட அங்கு அவ்வப்போது கொடூரமான குற்றங்கள் நடந்து விடுகின்றன. இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் நெஞ்சை பதறவைக்கும் கூட்டு பலாத்கார சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கவுர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் காய்கறி வாங்க வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியிடம் சிலர் பேசியுள்ளனர். அவர்களின் பெயர்கள் மோனு சானி, ராஜன் நிசாத் மற்றும் குந்தன் சிங் என்பதாகும். இவர்களும் அதே பகுதிதான் என கூறப்படுகிறது. இதனால் சிறுமியும் சகோதரர்கள் என்ற முறையில் பேசியுள்ளார்.
இந்த வேளையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிறுமியை அங்கிருந்து ஏமாற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்றுள்ளனர். மறைவான இடத்தில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சம்பவம் குறித்து வெளியில் கூறக்கூடாது என சொல்லிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதற்கிடையே தான் கடைக்கு சென்ற சிறுமி நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு செல்லாததால் குடும்பத்தினர் தேட தொடங்கினர்.
அப்போது மோனு சானி சிறுமி குந்தன் சிங்வீட்டின் அருகே மயங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
மேலும் மோனு சானி, ராஜன் நிசாத் மற்றும் குந்தன் சிங் ஆகியோர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறி போராட்டம் நடத்தினர். அதோடு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாஜகவினர் காப்பாற்ற நினைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இறந்த சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகார் மோனு சானி, ராஜன் நிசாத் மற்றும் குந்தன் சிங் உள்ளிட்டவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இதுபற்றி எஸ்பி கோபால் கிருஷ்ண சவுத்ரி கூறுகையில், ‛‛சிறுமிக்கு மோன, குந்தன் சிங் ஆகியோர் தெரிந்தவர்கள். இவர்களில் ஒருவர் தான் சிறுமியிடம் பேசி தனியாக அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு மற்ற 2 பேருடன் சேர்ந்து 3 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications