குட்டையில் தண்ணீர் எடுக்க வந்த பெண்.. கடத்தி கொண்டு போய் லாரியில் வைத்து.. 2 பேர் அராஜகம்.. கொடூரம்

16 வயது சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: குட்டைக்குள் தண்ணீர் எடுக்க சென்ற 16 வயது பெண்ணை, அப்படியே கடத்தி கொண்டு போய் லாரியில் வைத்து சீரழித்துள்ளனர் 2 பேர்.. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அந்த சிறுமி குடிசைக்குள் தூக்கு போட்டு தொங்கியேவிட்டார்.. இந்த அராஜக சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் வன்முறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் என்றுதான் ஒரு முடிவு கட்டப்படுமோ தெரியவில்லை. இளம் தளிர்கள் நாசமாகி கொண்டிருக்கிறார்கள்.. கொடூரமாக கொல்லப்பட்டு வருகிறார்கள்.. லாக்டவுன் சமயத்திலும் கயவர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

காசிப்பூர் மாவட்டத்தின் காசிமாபாத் பகுதியில் ஒரு சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 15-ம் தேதி, தன் குடிசை பகுதிக்கு அருகில் உள்ள குட்டைக்கு 16 வயது சிறுமி தண்ணீர் எடுக்க சென்றார்.

குட்டை

குட்டை

சிறுமி குட்டைக்கு செல்வதை அவரது பக்கத்து வீட்டுக்காரர் முனிஷ் சவுகான் என்பவர் பார்த்துவிட்டார்.ரொம்ப நாளாக சிறுமி மீது இவருக்கு ஒரு கண் இருந்துள்ளது. உடனே அவரது நண்பர் கன்ஷ்யம் யாதவ்-வை அழைத்து கொண்டு பின்னாடியே சென்றுள்ளார்.. இறுதியில் 2 பேரும் சேர்ந்து சிறுமியை கடத்திவிட்டனர்.

 பலாத்காரம்

பலாத்காரம்

இந்த 2 பேரில் கன்ஷ்யம் யாதவ் என்பவர் சற்று வசதியானவர் போலும். அவருக்கு சொந்தமான லாரி ஒன்றில் தூக்கி சென்ற சிறுமியை இழுத்து உள்ளே தள்ளினர்.. லாரியிலேயே இருவரும் சிறுமியை மாறி மாறி சீரழித்துள்ளனர். இறுதியில் அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி, வீட்டில் வந்து நடந்ததை சொல்லி அழுதிருக்கிறார்.. இதை கேட்டதும் சிறுமியின் தந்தைக்கு ஆத்திரம் வந்து பக்கத்து வீட்டில் இருந்த சவுகானிடம் நியாயம் கேட்டார்.

கைது

கைது

ஆனால், சவுகானோ சிறுமியின் குடும்பத்தினரையே மிரட்டி உள்ளார்.. ஆனால் வேறு வழியில்லாமல், சிறுமியின் தந்தை காசிமாபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இதையடுத்து, லாரியில் வைத்து கற்பழித்த அந்த 2 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு போலீசார் கைது செய்தனர். இதனிடையே சிறுமி மிகுந்த பலவீனமடைந்துவிட்டார்.. அதனால் அவரை கடந்த 18-ம் தேதி ஆஸ்பத்திரிக்கு மெடிக்கல் செக்கப்புக்கு அழைத்து சென்றனர்.

 தற்கொலை

தற்கொலை

சிகிச்சை பிறகு வீட்டுக்கு வந்தும் சிறுமியால் தனக்கு நடந்த அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை.. அதனால் தன் குடிசைக்குள்ளேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சிறுமி தற்கொலை செய்தது அந்த பகுதி மக்கள் ஆவேசமடைய வைத்தது.. அதனால் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்... குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரப்படும் என்று சமாதானம் செய்யப்பட்டது.. என்றாலும் மக்களின் கோபம் இன்னும் குறையவே இல்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+