உ.பி. முதல்வர் யோகி நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்- 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக 4 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.

குஷிநகர் விமான நிலையம்
இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் துரித கதியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்னொரு பக்கம் விவசாயிகள் படுகொலை, லாக்கப் மரணங்கள் என ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.

துப்பாக்கியுடன் மர்ம நபர்
இதனிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் அமர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.யின் பஸ்தி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார். அவரது வருகைக்கு முன்னதாக பொதுமக்கள் இருக்கைகளில் அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கைத்துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்ததை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபரிடம் விசாரணை
இதையடுத்து அந்த மர்ம நபர் அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியைத்தான் வைத்திருந்தார். ஆனால் துப்பாக்கியுடன் ஏன் முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்தார் என துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. அதேநேரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் அலட்சியத்தால்தான் மர்ம நபர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முடிந்தது என்கிற விமர்சனமும் எழுந்தது.

போலீசார் சஸ்பெண்ட்
இதனடிப்படையில் பணியில் இருந்த 7 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 7 போலீசாரில் 4 பேர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 3 பேர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார் பஸ்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ஶ்ரீவத்ஸவா.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications