லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

40% தொகுதிகளை.. உ.பி. தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு.. பிரியங்கா காந்தி அதிரடி

உபியில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

இதில், இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவையாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது.. 403 சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் இங்குள்ளன..

பாஜக

பாஜக

அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வென்றால் மட்டுமே அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை பெறமுடியும். அதனால், இந்த மாநிலத்தில் அபார வெற்றிபெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சியமைக்கும் நிலை உள்ளது. இந்த தேர்தலில் பாஜக - சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் என்ற 3 பெரும் கட்சிகளும் படுமும்முரமாக உள்ளன. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் தீவிர பணியாற்றி வருகிறது.. இதற்காக பிரியங்கா காந்தி இந்த ஒரு வருஷமாகவே உபியில் அடிக்கடி முகாமிட்டு, களப்பணியை பலப்படுத்தி வருகிறார்..

 காங்கிரஸ்

காங்கிரஸ்

காரணம், ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இதே உபியில் இப்போது, வெறும் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.. உபியில் காங்கிரஸை தூக்கி நிறுத்துவதற்காகத்தான், 2 வருஷத்துக்கு முன்னாடியே, பிரியங்காவை மாநில பொறுப்பாளராக கட்சி மேலிடம் நியமித்தது.. அப்போதிருந்து இப்போது வரை கட்சி வளர்ச்சி பணியை சிறப்பாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.. மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பது முதல், யாத்திரை நடத்துவது வரை ஏகப்பட்ட பிளான்களை பிரியங்கா கையில் வைத்திருப்பதாக தெரிகிறது.

 40 சதவீதம்

40 சதவீதம்

இந்நிலையில் பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.. பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்த முடிவு மாற்றத்தை விரும்பும் பெண்களுக்கானது" என்று பிரியங்கா காந்தி அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது மிகப்பெரிய அறிவிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஆட்சி தக்கவைக்க போராடி வரும் பாஜக, பிரியங்காவின் அறிவிப்புக்கு எந்த மாதிரி எதிர்வினையாற்ற போகிறது என்பது தெரியவில்லை.. ஆனால், பெண்களிடையே பெருத்த எழுச்சியை பிரியங்காவின் அறிவிப்பு உண்டுபண்ணி வருகிறது..

ஹத்ராஸ்

ஹத்ராஸ்

காரணம், கடந்த சில காலங்களாகவே பாதுகாப்பு என்பதே உபியில் காணாமல் போய் கொண்டிருக்கிறது.. பெண்களுக்கு எதிரான பல குற்றங்களும் பதிவாகி கொண்டிருக்கின்றன.. ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்காரம், உன்னாவோவில் நடந்த வழக்கு உட்பட எத்தனையோ பகீர் சம்பவங்கள் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியது.."பேசுபவர்கள்" நசுக்கப்படுகிறார்கள் என்று ஏற்கனவே பிரியங்கா காந்தி மாநில அரசை விமர்சித்திருந்த நிலையில், இன்றைய அறிவிப்பானது மிகுந்த எதிர்பார்ப்பை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.

English summary
40% Seats for Women: Congress Pits Girl Power Against Caste In Uttar pradesh Polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X