மாதத்திற்கு ஒரு நாள் தான்! தண்ணி பக்கமே போகாத கணவன்.. கல்யாணம் ஆன ஒரு மாதத்தில் மனைவி எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பதாகவும் அவர் பக்கத்தில் கூட போக முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியிருக்கிறார். ஆக்ராவில் நடைபெற்ற இந்த வினோத சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புதுமண ஜோடி இல்லற வாழ்க்கையை தொடங்கி ஒருமாதமே ஆன நிலையில், தனது கணவருடன் இனியும் வாழ முடியாது எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார்.

divorce marriage weird

மாதத்திற்கு ஒருமுறை தான்: கணவர் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் தனது முடிவை மாற்ற முடியாது என விடாப்பிடியாக இருந்த பெண் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறாராம். அப்படி கணவர் என்னதான் செய்தார் என்று பார்க்கலாம். ரஜேஷ்க்கு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே குளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து வந்து அதில் மட்டுமே குளித்து வந்து இருக்கிறார்.

6 முறை குளித்திருக்கிறார்: இந்த நிலையில் தான் திருமணம் முடிந்த பிறகும், ராஜேஷ் குளிக்காமல் இருந்துள்ளார். இதனைப் பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். கணவர் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதால், மனம் வெதும்பி போன அந்த பெண், கணவருடன் வாக்கு வாதம் செய்து இருக்கிறார். ஆனாலும் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்காத ராஜேஷ், மனைவி வற்புறுத்துவதால் 40 நாட்கள் இடைவெளியில் 6 முறை வரை குளித்து இருக்கிறார்.

விவாகரத்து: இருந்தாலும் சராசரி மனிதர் போல தனது கணவர் இல்லை எனவும் தினமும் குளிக்க மறுக்கிறார் என வேதனைப்பட்ட அந்த பெண், இனியும் பொறுக்க முடியாது எனக் கூறி டைவர்ஸ் கோரியிருக்கிறார். மேலும் கணவருக்கு எதிராக வரதட்சணை வழக்கும் தொடுத்து இருக்கிறார்கள். இதையடுத்து குடும்ப மையத்தில் இருவருக்கும் கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது தனது உடல் சுத்தத்தை பேணிக்காத்து வாழ முயற்சிப்பதாக ராஜேஷ் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார்.

வாழ முடியாது: ஆனாலும் இதற்கு உடன்படாத ராஜேஷின் மனைவியோ இனிமேலும் இவருடன் வாழ முடியாது என விடாப்பிடியாய் கூறியுள்ளார். இதையடுத்து ஒருவாரம் கழித்து மீண்டும் வாருங்கள் அப்போது பார்க்கலாம் எனக் கூறி குடும்ப நல வாழ்வு மைய அதிகாரிகள் இருவரையும் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். முன்னதாக உத்தர பிரதேசத்தில் இதேபோன ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.

குர்குரே சாப்பிட்டதால் விவாகரத்து: அதாவது, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் குர்குரே விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அவரது கணவர் ஒரு நாள் குர்குரே வாங்கி வர மறந்துவிட்டாராம். இதனால் கோபம் அடைந்த மனைவி, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இதையடுத்து போலீசார் இருவரையும் குடும்ப நல கவுன்சிலிங் பெறும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+