லக்கிம்பூர் கெரி கலவரம் : முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்திய அகிலேஷ் யாதவிற்கு தடை - தர்ணா
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்ற அகிலேஷ் யாதவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
லக்னோ: லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்ற முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டு சிறையில் வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுக்கவே தனது வீட்டிற்கு முன்பாக சாலையில் அமர்ந்து அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. அதனை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள்,வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பாஜக தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். லக்கிம்பூரில் திரண்ட ஏராளமான விவசாயிகள் திரண்டு நின்றிருந்தனர். துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். மேலும், பாஜக தொண்டர்கள் சிலரும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் லக்கிம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங், நான்கு விவசாயிகள் உட்பட 9பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்கள் அமைச்சருடன் பாதுகாப்புக்கு வந்த ஒரு வாகனத்தில் அவரது மகனும், உறவினர்களும் வந்துள்ளனர். அந்த காரே விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர்.
அகிலேஷ் யாதவ் கண்டனம்
விவசாயிகளை கொலை செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். விவசாய சட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகளை கொலை செய்வது மனிதாபிமானமற்ற கொடுமையான செயல் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆணவம் கொண்ட பாஜக மக்களை அடக்குவதை உத்தரபிரதேசம் இனி பொறுத்துக்கொள்ளாது என்று கூறியுள்ள அகிலேஷ் யாதவ், இதே நிலை நீடித்தால், பாஜகவினரால் இந்த மாநிலத்தில் நடக்கவோ, வாகனத்தில் இருந்து இறங்கவோ முடியாது என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
லக்கிம்பூர் கெரியில், பாஜகவினரால் பாதிக்கப்பட்டு பலத்த காயமடைந்த விவசாயி தலைவர் ஸ்ரீ தேஜிந்தர் சிங் விர்க் ஜியுடன் சிறிது பேசலாம். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்ற முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டு சிறையில் வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுக்கவே தனது வீட்டிற்கு முன்பாக சாலையில் அமர்ந்து அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
தடுத்து நிறுத்துங்கள்
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் வன்முறை நடைபெற்ற பகுதிக்கு தான் இன்று நேரில் வர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பக்ஹல் அறிவித்தார். அதேபோல், வன்முறை நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட உள்ளதாக பஞ்சாப் துணை முதல்வர் சக்ஜீந்தர் ரந்தவாலாவும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பக்ஹல் மற்றும் பஞ்சாப் துணை முதல்வர் சக்ஜீந்தர் ரந்தவாலா உத்தரபிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என லக்னோ விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் மூலம் பூபேஷ் பக்ஹல் மற்றும் சக்ஜீந்தர் ரந்தவாலா உத்தரபிரதேசம் வர திட்டமிட்டிருந்த நிலையில் இவர்கள் இருவரையும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கக்கூடாது என விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications