முதல்முறை இப்படி! மோடிக்கு எதிராக திரும்பிய.. நாட்டின் பெரிய 4 சங்கராச்சாரியார்கள்! அயோத்தியில் திக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேகத்திற்கு செல்ல பூரியில் உள்ள கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்த நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதியும் ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்றுள்ளார். அதோடு நாட்டின் நான்கு முக்கிய சங்கராச்சாரியார்கள்அல்லது மதத் தலைவர்களோ அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது. மோடி இதை திறப்பார்.. சாஸ்திரத்தின் படி மோடி இதை திறக்கவே கூடாது. ஆனால் அதை மீறி மோடி இதை திறந்து வைப்பார். நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

All four Shankaracharyas now turned against PM Modi in Ayodhya Ram Mandir issue

குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இப்போது சிலை பிரதிஷ்டை செய்வதே தவறானது. அதையும் மோடி செய்வது மிக தவறானது என்று 4 சங்கர்ச்சாரியார்களும் தெரிவித்துள்ளனர்.

யார் இவர்கள்: சங்கராச்சாரியார் என்பவர்கள் 8 ஆம் நூற்றாண்டில் இந்து துறவியான ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட இந்து மதத்தின் அத்வைத வேதாந்த பாரம்பரியத்தின் தலைவர்கள் ஆவார்கள். இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நான்கு மடங்கள் அல்லது துறவற குழுக்களின் மடாதிபதிகள்தான் சங்கராச்சாரியார். ஜோதிர் மடம் (ஜோஷிமத்) மற்றும் கோவர்தன் மடம் தவிர மற்ற இரண்டு மடங்கள் சிருங்கேரி சாரதா பீடம் (சிருங்கேரி, கர்நாடகா), மற்றும் துவாரகா சாரதா பீடம் (துவாரகா, குஜராத்) ஆகும்.

இந்த நான்கு மடங்களும் முதல்முறையாக மோடிக்கு எதிராக திரும்பி உள்ளன. இந்து மத சாஸ்திரப்படி, சனாதானத்தின் படி மோடிக்கு சிலையை வைக்கும் அதிகாரம் இல்லை. அதை மீறி அவர் வைப்பதை இவர்கள் விரும்பவில்லை என்பதால் நாட்டின் நான்கு முக்கிய சங்கர்ச்சாரியார்களோ அல்லது மதத் தலைவர்களோ அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

சிவா வழிபாடு:" குறிப்பிடத்தக்க வகையில், ஆதி சங்கரரும் அவரது மடங்களும், ஷைவம் - இந்துக் கடவுளான சிவன் வழிபாடு - மற்றும் சக்தி, இந்து தெய்வம் சக்தியின் வழிபாடு ஆகியவற்றை மட்டுமே மேற்கொண்டு வந்தது. இருப்பினும் இது வைஷவம் பற்றிய கருத்துக்களை போக போக ஏற்றுக்கொண்டது. இந்து கடவுள் விஷ்ணு மற்றும் ராமர் உட்பட அவரது பல்வேறு அவதாரங்களை வழிபடுதல் அதன்பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில்தான் ராமர் கோவில் வழிபாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர் சங்கராச்சாரியார்.

மோடி கலந்து கொள்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+