சாமியார் முதல் முதல்வர் வரை! யோகி ஆதித்யநாத்தின் வியக்க வைக்கும் வரலாறு!
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள மடத்தின் சீடராக இருந்து அரசியலில் நுழைந்து தற்போது பாஜகவில் முன்னணி தலைவர்களில் ஒருவராக மாறி வியக்க வைத்துள்ளார்.
Recommended Video

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து ஆட்சியை பிடித்த நிலையில் 2வது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

யோகியின் வரலாறு
மடாதிபதியாக இருந்து அரசியலில் நுழைந்து இந்தியாவின் அதிக சட்டசபை தொகுதிகள் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யாத் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் சிறு கிராமத்தில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த இவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு பாஜக கொள்கையில் ஈர்க்கப்பட்டு அரசியலில் கால்பதித்து எம்பியாகி, முதல்வரான யோகி ஆதித்யநாத் பற்றிய முழுவிபரம் வருமாறு:

நடுத்தர குடும்பம்
உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் யோகி ஆதித்யநாத். இவரது தந்தை பெயர் ஆனந்த் சிங் பிஷ்த். வனக்காவலர். தாய் பெயர் சாவித்ரி தேவி. இவர்களுக்கு 1972 ஜூன் 5ல் யோகி ஆதித்யநாத் 2வது குழந்தையாக பிறந்தார். யோகி ஆதித்யநாத்துக்கு 4 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர். இவரது இயற்பெயர் அஜய் சிங் பிஷ்த் என்பதாகும். உத்தரகாண்டில் உள்ள ஹேம்வதி நந்தன் பகுகுனா கர்வால் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஷ்வ ஹிந்து பரிஷத்தில் செயல்பட்டார்.

மடாதிபதி
1990ல் வீட்டை விட்டு வெளியேறி அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தில் சேர்ந்தார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் மடத்தின் தலைவர் மஹந்த் அவையத்நாத்தின் சீடராக செயல்பட்டார். இதையடுத்து அவரது பெயர் அஜய் சிங் பிஷ்த் என்பதில் இருந்து யோகி ஆதித்யநாத் என மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மடத்திலேயே செயல்பட்டு வந்தார். மஹந்த் அவையத்நாத் மறைவுக்கு பிறகு 2004 செப்டம்பர் 14ல் மடத்தின் மடாதிபதியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார்.

5 முறை எம்பி
90 காலக்கட்டத்தின் துவக்கத்தில் ஆன்மிகவாதியாக இருந்த யோகி ஆதித்யாத் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். 1998ல் நடந்த தேர்தலில் தனது 26வது வயதில் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் இளம்வயது எம்பி என பெயர் பெற்றார். இந்த தொகுதியில் இதுவரை 5 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். இந்த தொடர் வெற்றிக்கு அவரது இந்துத்துவ கொள்கையே காரணமாகும். தீவிரமாக இந்துத்துவா கொள்கையில் ஈடுபாடு கொண்ட இவர் பயமின்றி தனது கருத்துகளை எடுத்து வைத்து வந்தார்.

தடாலடி பேச்சால் அதிருப்தி
பாஜக உறுப்பினராக இருந்தாலும் ஆதித்யநாதின் ஆரம்பகால பாஜக பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ஏனென்றால் அவரும் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடனும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவில்லை. தடாலடி பேச்சால் கட்சியுடன் இணக்கமான உறவுவைப் பேணாத ஆதித்யநாத் ஆரம்பத்தில் கட்சியை விமர்சனமும் செய்திருக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு லக்னோவில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்த சமயத்தில் தன்னுடை செல்வாக்கை நிரூபிப்பதற்காக கோரக்பூரில் இந்து மஹாசம்மேளன் ஒன்றை நடத்தினார். இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

செல்வாக்கை பறைசாற்றிய நிகழ்வு
அதேநேரத்தில் அவரது இந்துத்துவ கொள்கையானது 2007ல் வகுப்புவாத கலவரங்கள், தொடர்ந்த நிகழ்வுகளில் உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் அவரது அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தியது. மேலும் 2007 ல் நடந்த மதப்பிரச்சனையின்போது தடை ஆணையை மீறியதாக யோகி ஆதித்யநாத் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை அழைத்து செல்வது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் நிலையத்துக்கு அவரை 5 மணிநேரமாக போலீசார் அழைத்து சென்றனர். இதற்கு மக்கள் அதிகமாக கூடியதும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுமே காரணமாகும். இது யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கை பறைசாற்றியது.

இந்து யுவவாஹினி அமைப்பு
மேலும் ‛இந்து யுவவாஹினி' என்ற அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பு இந்துத்துவா மற்றும் தேசியவாதத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாக கூறி வருகிறது. பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத்திற்கு எதிராக போராடுவது இதன் செயல்திட்டங்கள். இந்த திட்டங்கள் பாஜகவின் வாக்குறுதிகளிலும் எதிரொலித்து 2017ல் அக்கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்தது.

முதல்வரானது எப்படி
2017ல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின்போது பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக கூட இடம்பெறாத யோகி ஆதித்யநாத் தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 1991ம் ஆண்டுக்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது உத்தர பிரதேச முதல்வராக பாஜகவின் மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, அப்போதைய மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டவர்கள் போட்டியில் இருந்த நிலையில் அதிர்ஷ்ட காற்று யோகி ஆதித்யநாத் பக்கம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான 5 ஆண்டு
மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக முதல்வரான யோகி ஆதித்யநாத் தற்போது உத்தர பிரதேசத்தின் முகமாக மாறியுள்ளார். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் அவர் 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். யோகி ஆதித்யாத்தின் அரசியல் வாழ்க்கையில் கடந்த 5 ஆண்டுகள் மிகமுக்கியமானவை. இந்த ஆண்டுகளில் தான் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொட்டார். இதற்கு கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அவரது அதிரடி நடவடிக்கைகள் தான் காரணமாக கூறப்படுகிறது.

பின்வாங்காத குணம்
மக்கள் தொகையில் அதிகமுள்ள உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுக்குள் வைப்பது என்பது சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் யோகி ஆதித்யநாத் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தினார். ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்ட்டர் செய்தார். இதில் அவர் விமர்சனங்களையும் சந்தித்தது. இருப்பினும் தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்கவே இல்லை. மேலும் போதை பொருள், ரியல் எஸ்டேட் மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திய அவர் மாநிலத்தில் கிராமங்கள் தோறும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தார். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். இருப்பினும் உத்தர பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லை, வேலைவாய்ப்பின்மை, மருத்துவ வசதி இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அதை தாண்டி அவர் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

ஏழ்மையில் குடும்பம்
யோகி ஆதித்யநாத் அரசியலில் வளர்ந்து இருந்தாலும் அவரது குடும்பம் இன்னும் சிரமத்தில் தான் உள்ளது. வனக்காவலரான தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் மரணமடைந்த நிலையில், தாய் சாவித்ரி தேவி சிறிய வீட்டில் தான் வசிக்கிறார். அவரது சகோதரி சசி சிங் உள்பட பிற சகோதர சகோதரிகள் தினசரி கூலியை எதிர்பார்த்து தான் வேலை செய்து வருகின்றனர். கொரேனா முதல் அலையின்போது யோகி ஆதித்யாத்தின் தந்தை இறந்தார். அப்போதும் யோகி ஆதித்யநாத் அங்கு செல்வில்லை. இந்நிலையில் தான் வயதான தாயை வந்து பார்த்துவிட்டு பதவியேற்கும்படி யோகி ஆதித்யநாத்துக்கு அவரது சகோதரி சசிசிங் நேற்று உருக்கமாக கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications