உத்தர பிரதேசத்தில் பரிதாபம்! நடுவழியில் ஆம்புலன்ஸில் காலியான பெட்ரோல்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    உத்தர பிரதேசத்தில் பரிதாபம்! நடுவழியில் ஆம்புலன்ஸில் காலியான பெட்ரோல்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நோயாளியை ஏற்றிக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று வழியிலேயே நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Ambulance carrying patient runs out of fuel midway in Uttar Pradesh

    இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடக்கு உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூர் என்ற ஊரின் அருகே உள்ள கிராமம் ஒன்றில் அவசரஉதவி கோரி ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒருவர் அழைத்துள்ளார். நேற்று மாலை இந்த ஃபோன் கால் வந்துள்ளது.

    Ambulance carrying patient runs out of fuel midway in Uttar Pradesh

    பிஜ்னூர் என்ற இடத்தில் இருந்து மீரட் நகருக்கு நோயாளியை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பெட்ரோல் தீர்ந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், டிராக்டர் மூலம் ஆம்புலன்ஸை அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இழுத்துச் சென்றனர். அங்கு எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், ஆம்புலன்ஸ் மீரட் நகருக்குச் சென்றது.

    Ambulance carrying patient runs out of fuel midway in Uttar Pradesh

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதி வழியில் எரிபொருள் தீர்ந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர் அகிலேஷ் மோகன் கூறுகையில், "பிஜ்னூரில் இருந்து மீரட்டுக்கு வந்து கொண்டிருந்த போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+