லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாரணாசியில் போட்டியில்லை.. கெஜ்ரிவால் திடீர் முடிவு.. என்ன காரணம்

Google Oneindia Tamil News

லக்னோ: வாரணாசி தொகுதியில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியானது. இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறுகையில் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார்.

வேட்பாளர் யார்

வேட்பாளர் யார்

வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம். நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம்.

இறுதி முடிவு

இறுதி முடிவு

உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். நரேந்திர மோடி 581,022 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 209,238 வாக்குகளை பெற்றனர்.

வெற்றி தோல்வி

வெற்றி தோல்வி

இந்த தோல்வி கற்றுக் கொடுத்த பாடத்தால் தற்போது வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிடவில்லை என்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யார் வேட்பாளராக நின்றாலும் வெற்றியும் தோல்வியும் வாக்காளர்களின் கையில்தானே உள்ளது.

English summary
Aravind Kejriwal decides not to contest in Varanasi Loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X