"நாங்க இருக்கோம்.." ஓவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு பாஜக அமைச்சர் சப்போர்ட்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஓவைசி எம்.பி., கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கு பாஜக அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பிப்.,10, பிப்.,14ல் இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.,யுமான ஓவைசி கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

துப்பாக்கிச்சூடு
இதனால் வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிப்ரவரி 4ம் தேதி மீரட்டில் பிரசாரத்தை முடித்து டெல்லிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். ஹப்பூரில் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருவர் கைது
இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் சர்மா, சுபம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைதான இருவருக்கும் உத்தர பிரதேச மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுனில் பரலா ஆதரவு தெரிவித்துள்ளார்.

முழு ஆதரவு
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛சச்சின், சுபம் ஆகியோரின் குடும்பத்துக்கு அனைத்து வழிகளிலும் முழு ஆதரவு கொடுப்போம். இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை தெரியவரும்
முன்னதாக கவுதம் புத்தா நகரில் உள்ள சச்சின் சர்மாவின் வீட்டுக்கு அவர் சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தவறாக வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். இது விசாரணை முடிவில் உண்மை தெரியவரும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications