டிரம்ஸ் அடியுங்க.. தட்டை அடியுங்க.. வாரணாசி பெண்களுக்கு வாக்குப்பதிவை அதிகரிக்க மோடி கொடுத்த ஐடியா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவினை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். ஜூன் 1ம்தேதி அன்று காலையிலேயே 25 முதல் 30 பெண்கள் ஒன்று கூடி டிரம்ஸ் அடித்து, தட்டுக்களை வைத்து அடித்தும், பாட்டுப்பாடி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்றால் வாக்குப்பதிவு உயரும் என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி அன்று நடைபெறுகிறது. வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை பிரச்சாரத்திற்கு செல்லும் இடம் எல்லாம் கடுமையாக விமர்சித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும் கடுமையாக விமர்சித்தார்.

Beat Drums Clang Thalis PM Narendra Modi Advice Varanasi Women How To Boost Polling

அதேநேரம் வாக்குப்பதிவை அதிகரிப்பது எப்படி என்பது குறித்தும் வாரணாசி பெண்களுக்கு அவர் புதிய ஐடியா கொடுத்து விளக்கம் அளித்தார். பெண்களுக்கு எதிரான கட்சிகள் vs பெண்களுக்கான பாஜகவின் நலத்திட்டங்கள் என்று பட்டியிலிட்டு பேசினார். அப்போது பேசிய மோடி, " வாரணாசி பெண்களுக்கு என் அன்பான வேண்டுகோள், இங்கு முடிந்தவரை அதிகபட்ச வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும். 25-30 பெண்களைக் கூட்டி, மேளம் அடித்து, தட்டுக்களை வைத்து அடித்து, பாடல்களைப் பாடி வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். ஒவ்வொரு சாவடியிலும் காலை 10 மணிக்குள் 20-25 ஊர்வலங்களை நடத்த முடிந்தால், வாக்குப் பதிவு எண்ணிக்கை பெரிய அளவில் உயரும்" என்று கூறினார். முன்னதாக கொரோனா பெருந்தொற்றின் போதும், இதேபோல் தட்டுக்களை வைத்து அடிக்க சொன்ன பிரதமர் மோடி, விளக்கேற்றுமாறும் கூறியிருந்தார்.

அதேநேரம் இன்று மாலை வாரணாசியில் ஏராளமான பெண்கள் மத்தியில் ஆக்ரோசமாக பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்றும், சமாஜ்வாதி கட்சி சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மெத்தனமாக இருந்த கட்சிகள் என்றும் விமர்சித்தார். "ஏதாவது நடந்தால், 'சிறுவர்கள் தவறு செய்யலாம்' என்று சமாஜ்வாதி கட்சியில் சொல்வார்கள். ஆனால் இப்போது சிறுவர்கள் 'அதே தவறு செய்யட்டும்', யோகி-ஜிக்க அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியும்," என்று பிரதமர் மோடி கூறினார்.

2014 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் மறைந்த தலைவர் முலாயம் சிங் யாதவ், மும்பையில் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து முலாயம் சிங் யாதவ் பேசுகையில், " பலாத்கார வழக்குகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமா? அவர்கள் சிறுவர்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள்," என்று கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டி தான் பிரதமர் மோடி வாரணாசியில் பேசினார்.

இதேபோல் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இந்திய கூட்டணி கட்சிகளின் மனநிலை எப்போதும் பெண்களுக்கு எதிரானது. பெண்கள் இடஒதுக்கீட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் பெண்கள் அங்கு வாழ்வது கடினம்.

பனாரஸ் மக்கள் , உத்தரப்பிரதேம் மற்றும் பீகாரில் உள்ள ஜங்கிள் ராஜ் பற்றி நன்கு அறிந்தவர்கள். அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நம்முடைய சகோதரிகள் மற்றும் மகள்கள் வீட்டை விட்டு வெளியேற, பாதுகாப்புக் காரணங்களுக்காக தங்கள் படிப்பை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டிய நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மாறி உள்ளது. பெண்களுக்காக பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

பெண்களுக்காக வீட்டுவசதி, சுகாதாரம், இலவச உணவு மற்றும் மானிய விலையில் சமையல் எரிவாயு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குடும்பம் ஒவ்வொரு குடும்ப தலைவியின் கீழும் எவ்வளவு சேமிக்கிறது என்று பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் கட்டப்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதியில் 3 லட்சம் பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, பெண்கள் மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகளால் முன்ணுக்கு வந்துள்ளனர். இது நாட்டில் அதிகம் விவாதிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும். நீங்கள் (பெண்கள்) இல்லாமல் வீட்டை நடத்த முடியாது. இது 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு புரியவில்லை" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+