பதற்றத்தில் உத்தராகண்ட்.. இன்று பொதுசிவில் சட்டம் சட்டசபையில் தாக்கல்! முதல் மாநிலமாக நிறைவேற்றுமா?
லக்னோ: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கும் நிலையில் இன்று அம்மாநில சட்டசபையில் அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது.
பாஜகவின் பல ஆண்டுகால கனவு திட்டமாக பொது சிவில் சட்டம் இருந்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக பாஜக ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு இதற்கான பணிகளை தொடங்கியது. கடிதம் மூலமாகவும் இணையம், ஈ மெயில் மூலமாகவும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று மக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்காக பல லட்சக்கணக்கானோர் கருத்து தெரிவித்தனர்.

எதிர்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு கொண்டு வரும் பொதுசிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்ஸிக்கள், பௌத்த மதத்தினர் திருமணம், சொத்து போன்ற சிவில் விவகாரங்களில் தங்கள் மத சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டமாக மாற்றுவது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என சட்ட வல்லுநர்கள் எச்சரித்தனர்.
பொது சிவில் சட்டம் காரணமாக சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. மத்திய அரசு கருத்து கேட்பதற்கு முன்பே உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துவதற்கான குழுவை கடந்த 2022 ஆம் ஆண்டே அமைத்தார் அம்மாநில முதலமைச்சர்.
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவையில் விரைவில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டம் பொதுவான மதமாக இருக்கும்." என்றார். இந்த நிலையில் உத்தராகண்டில் சட்டசபையில் இதை கொண்டு வந்து சட்டமாக அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், இந்த சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து இன்று சட்டசபையில் இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் அசம்பாவீதங்கள் நிகழாமல் இருக்க சட்டசபை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications