‛‛பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் இடஒதுக்கீடு ஒழிக்கப்படும்’’.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆரூடம்
லக்னோ: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டம் மாற்றம் செய்யப்படும். அதோடு இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பாக குற்றம்சாட்டி உள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டது. தற்போது 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 3 கட்டங்களாக 150க்கும் அதிகமான தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசதங்களில் உள்ள தொகுதிகளுக்கும் இன்னும் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது.

இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார். லக்னோவில் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வேளையில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: தற்போதைய டிரெண்ட்படி பார்த்தால் பாஜக 220க்கும் குறைவான தொகுதிகளில் தான் லோக்சபா தேர்தலில் வெல்லும். ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த முறையை காட்டிலும் பாஜக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வராது. ‛இந்தியா' கூட்டணி தான் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பாஜகவில் இருப்பவர்கள் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள். இதனால் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும். அதோடு இடஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டு விடும். மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛‛பாஜக 400 தொகுதிகளை இலக்கு வைத்துள்ளது. ஆனால் அவர்களுக்கு கிடைப்பது என்பதோ 143 தொகுதிகள் தான். உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டம் 99 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு ஒன்றுமே கிடையாது.
எங்களின் முதன்மை நோக்கம் என்பது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவத தான். ஆம்ஆம்தி, சமாஜ்வாதி உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை அதிகாரத்தில் இருந்த விரட்டியடிப்போம்'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications