‛பம்பாய்’ பட பாணி.. புர்கா அணிந்து காதலியை பார்க்க போன காதலன்.. காத்திருந்த அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ‛பம்பாய்' பட பாணியில் உத்தர பிரதேச மாநிலத்தில் புர்கா அணிந்து ரகசியமாக காதலியை சந்தக்க சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது.

Recommended Video

    தமிழ்நாட்டிற்கு மின்சாரம் இல்லை மத்திய அரசின் புதிய விதியால் சிக்கல்

    திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, நடிகை மணிஷா கொய்ராலா நடிப்பில் பம்பாய் படம் வெளியானது. இந்த படத்தில் அரவிந்த் சாமி தனது காதலியான மணிஷா கொய்ராலாவை பார்க்க புர்கா அணிந்து செல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும்.

    அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது தனது காதலியை பார்க்க முயன்று கிராம மக்களிடம் சிக்கி கொண்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

    இளைஞரின் காதல்

    இளைஞரின் காதல்

    உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் சாய்ப் அலி (வயது 25). அருகே உள்ள கிராமத்தின் பெயர் மெமாத்பூர். இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவர் காதலித்து வந்தார். சாய்ப் அலியும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த கிராமத்துக்கு சென்று காதலியை பார்த்து வந்தார். இதுதவிர அவர்கள் இருவரும் அவ்வப்போது பிற இடங்களிலும் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

    ரகசியமாக சந்திக்க முடிவு

    ரகசியமாக சந்திக்க முடிவு

    இந்நிலையில் தான் சாய்ப் அலிக்கு புதிதாக வேலை ஒன்று கிடைத்தது இதற்காக அவர் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது காதலியை சந்திக்க விரும்பினார். காதலியின் சொந்த ஊரான மெமாத்பூரில் அவரை ரகசியமாக சந்திக்க சென்றார். இதுதொடர்பாக அவர் யோசித்தபோது தான் ஒரு திட்டம் ஒன்று அவரது மூளையில் உதயமானது.

    கிராம மக்களிடம் சிக்கிய இளைஞர்

    கிராம மக்களிடம் சிக்கிய இளைஞர்

    அதாவது பெண் போன்று புர்கா அணிந்து சென்று காதலியை சந்திக்க திட்டமிட்டார். இதையடுத்து அவர் புர்கா அணிந்து மெமாத்பூருக்கு காதலியை சந்திக்க சென்றார். இந்த வேளையில் அவரது நடத்தையில் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு புர்காவை அகற்றும்படி கூறினார்கள். இதனால் செய்வதறியாது திகைத்த அவர் வேறு வழியின்றி புர்காவை அகற்றினார்.

    போலீசில் ஒப்படைப்பு

    போலீசில் ஒப்படைப்பு

    இதன்மூலம் சாய்ப் அலி போட்டிருந்த வேடம் கலைந்தது. இதையடுத்து அவரை பிடித்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி பொதுமக்கள் இடையே அமைதியை சீர்க்குலைக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி சாய்ப் அலியை போலீசார் கைது செய்து அணிந்து சென்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+