முதலிரவு அறையில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. குழந்தையே பிறந்தாச்சே! எப்படி?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற உடன் புதுப்பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் திருமண விழாவுக்கு வந்த உறவினர்கள் ஷாக்காகினர். இதுபற்றி விசாரித்தபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை குமாரியா கிராமத்தை சேர்ந்தவர் ரிஸ்வான். இவருக்கும் அந்தபகுதியில் உள்ள பஹதுர்கஞ்ச்ச் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்தனர். இந்த வேளையில் அவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டனர். ரிஸ்வான் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
கர்ப்பமான காதலி
இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதுபற்றி ரிஸ்வானிடம் கூறினார். அதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். ஆனால் காதலி மறுத்துவிட்டார். அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதற்கு ரிஸ்வான் தயங்கினார். அதுமட்டுமின்றி அவர் தனது காதலியை தவிர்க்க தொடங்கினார்.
போலீஸிடம் கூறி அழுத பெண்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காதலி சம்பவம் குறித்து தனது கிராமத்தின் அருகே அவுட் போஸ்ட்டில் உள்ள காவலரிடம் கூறி அழுதார். இதையடுத்து இந்த விவகாரம் ஊர் பெரியவர்களிடம் சென்றது. ரிஸ்வான் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து ஊர் பெரியவர்கள் பேசினர். அதன்பிறகு ரிஸ்வான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
திருமணம்- முதலிரவில் பிரசவம்
இருவரின் வீட்டிலும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த பிரச்சனையும் இன்றி திட்டமிட்டப்படி திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவு அறைக்கு ரிஸ்வான் தனது மனைவியுடன் சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் சிகிச்சை அளித்த நிலையில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் தெரிவித்தார்.
கிராமமே பரபரப்பு
இந்த சம்பவம் ராம்பூர் மாவட்டத்தில் பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பான செய்தி இணையதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வேடிக்கையாக கமெண்ட்செய்து வருகினறனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் போலீசுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று அஜீம் நகர் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்ப்பட்டு வந்தாலும் கூட சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதி அமைதியாக உள்ளனர். இதன்மூலம் ரிஸ்வான் தான் குழந்தைக்கு தந்தை என்பது உறுதியாகி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications