Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவன்கிட்ட பேசாதேனு சொன்னா கேட்கமாட்டியா? காதலில் விழுந்த தங்கை! கழுத்தை நெரித்து கொன்ற சைக்கோ அண்ணன்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் இளைஞர் ஒருவர் தனது சகோதரியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் இளைஞர் ஒருவர் தனது சகோதரியுடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களது பெற்றோர் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து அண்ணனும், தங்கையும் அவர்களது சொந்த வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. தங்கை ஷிவானி வீட்டுக்கு தாமதமாக வருவதாக அண்ணன் ஹிமான்ஷு தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார்.

ஆனால் தன்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று ஷிவானி அண்ணனுக்கு அறிவுறுத்தியுள்ளார். இப்படி இருக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சண்டை பெரியதாக வெடித்துள்ளது. இதனையடுத்து ஷிவானி கோவித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். பின்னர் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். ஆனால் இன்றும் தாமதமாகதான் வீட்டிற்கு வந்ததாக ஷிவானியை அவளுடைய அண்ணன் ஹிமான்ஷு கேள்வியெழுப்பியுள்ளார்.

சண்டை

சண்டை

எனவே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது. சண்டை அதிகமான நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்துள்ளனர். அதன் பின்னர் ஒரு மணிநேரம் எந்த சத்தமும் வீட்டிலிருந்து வரவில்லை. எனவே சண்டை முடிவுக்கு வந்துள்ளது என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இரவு இவர்களுக்குள் மீண்டும் சண்டை வந்திருக்கிறது. இவர்களுக்குள் வரும் சண்டை எப்போதும் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக நீடித்திருக்கும். ஆனால் இரவு இந்த சண்டை தொடங்கிய பிறது ஒரு 15 நிமிடத்திற்கெல்லாம் வீடு அமைதியாகிவிட்டிருக்கிறது. இதனை இரண்டு வீடு தள்ளியிருந்த நபர் ஒருவர் கவனித்துள்ளார்.

கொலை

கொலை

அதன் பிறகு சுமார் 2 மணி நேரம் ஆகியும் அவர்கள் வீட்டிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனையடுத்து இந்த நபர் ஹிமான்ஷு வீட்டு பக்கம் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு ஹிமான்ஷு ஒரு குழியை தோண்டிக்கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு பக்கதில் ஷிவானி அசையாமல் படுத்திருந்திருக்கிறார். இதனை கண்டு அதிர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் அப்படியே வந்த வழியை நோக்கி திரும்பி சென்றுவிட்டார். அதன் பின்னர் நள்ளிரவு ஒரு 1 மணிக்கு லக்னோ காவல் நிலையத்திற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பில் பேசிய நபர் தனது பெயரை கூறாமல் தனது வீட்டருகில் ஒரு கொலை நடந்திருப்பதாகவும், உடனடியாக வந்தால் சடலத்தை மீட்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ரகசிய தகவல்

ரகசிய தகவல்

இதனையடுத்து முகவரியை பெற்ற காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். நள்ளிரவு 1.30 மணிக்கு தனது வீட்டின் கதவை தட்டிய காவல்துறையினரை கண்டதும் ஹிமான்ஷு நடுங்கி போயுள்ளார். இதனையடுத்து அவரிடம் தங்கை ஷிவாங்கி எங்கே என்று கேள்வியெழுப்பியுள்ளனர். அவள் அவளுடைய தோழியின் வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார். அவளுடைய செல்போனுக்கு அழைத்த நிலையில் அந்த போன் வீட்டில்தான் இருந்திருக்கிறது. எனவே காவல்துறையினருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது ஹிமான்ஷுவின் தங்கை ஷிவானிக்கும் வேறு நபருக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இதனை ஹிமான்ஷு கண்டித்திருக்கிறார். ஆனால் எவ்வளவு சொல்லியும் ஷிவானி காதலை முறித்துக்கொள்ளவில்லை. எனவே ஆத்திரமடைந்த

ஹிமான்ஷு, நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் இங்கு இரு இல்லையெனில் சென்று விடு என கூறியுள்ளார். எனவே ஆத்திரத்துடன் வெளியேறிய ஷிவானி மீண்டும் அவளது காதலனை சந்தித்திருக்கிறார். பின்னர் மாலை வீடு திரும்பியபோது இந்த விவகாரம் ஹிமான்ஷுவுக்கு தெரிய வந்துள்ளது. எவ்வளவு சொல்லியும் மீண்டும் அவனை போய் சந்தித்திருக்கிறாய் என்று கூறி தாவணியை கொண்டு அவளது கழுத்தை நெறித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஷிவானியின் சடலத்தை கைப்பற்றி அவளது அண்ணன் ஹிமான்ஷுவை கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+