எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! ஹெல்மெட்டோடு வந்த பஸ் டிரைவர்.. குழம்பிய பயணிகள்! இதுதான் நிலைமை!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் டிரைவர் ஒருவர் ஹெல்மட் அணிந்தபடி பஸ் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
தற்போது அனைவரது கையிலும், ஸ்மார்ட் போன்கள் இருப்பதினால் எங்காவது, வித்தியாசமான நிகழ்வுகள், சம்பவங்கள் ஏற்பட்டால் அதை உடனடியாக வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.

வீடியோ
அந்த விஷயமும் புதுவிதமாகவோ அல்லது ரசிக்கும்படியானதாகவோ இருந்தால் சொல்லவே வேண்டாம் அது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபத்தில் நடந்துள்ளது. அப்படி என்ன வீடியோ என்றால், சாலையில் பஸ் ஓட்டுனர் ஒருவர் ஹெல்மட் அணிந்தபடி சென்றது தான். இந்த வீடியோவையும் பஸ் டிரைவர் போஸ்ட் செய்யவில்லை.

என்ன நடந்தது
சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் தான், 'என்னடா இது பஸ் டிரைவர் ஹெல்மட் அணிந்தபடி பஸ் ஓட்டிச்செல்கிறாரே' என வியந்து, இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளார். அதுவும் அந்த பஸ்சை விரட்டி சென்று வீடியோவாக எடுத்துள்ளார் என்பது தான் ஹைலட். இதில், அந்த நபர் பதிவிட்ட உடனேயே வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவ தொடங்கியது. மேலும் பலரும் வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வந்தனர்.

வீடியோ
ஒரு சிலர் ஏன்? அந்த பஸ் டிரைவர் ஹெல்மட் அணிந்திருந்தார் என கேள்வி கேட்கும் விதமாக பதிவிட்டிருந்தனர். ஆனால் அந்த பஸ் டிரைவரிடம் இதுபற்றி கேட்ட போதுஅவர் கூறிய பதில் பலரையும் வியக்க வைத்துள்ளது. இது குறித்து பஸ் டிரைவர் கூறுகையில், 'பஸ்சை டெப்போவில் இருந்து எடுக்கும் போது முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்து முன்பக்க கண்ணாடி முழுவதுமாக அகற்றப்பட்டது.

கண்ணாடி
கண்ணாடி இல்லாமல் அந்த டிரைவர் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். இதனால் பஸ் ஓட்டிச்செல்லும் போது எனக்கு கண் எரிச்சல் ஏற்படாமல் இருப்பதாக இப்படி செய்தேன். மழை பெய்தால் தண்ணீர் துளிகள் முகத்தில் படாமல் இருப்பதற்காகவும் தான் ஹெல்மட் அணிந்தேன்' என்றார். பஸ் டிரைவரின் இந்த பதில் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications