சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யையும் வாபஸ் பெறாவிட்டால்.... மத்திய பாஜக அரசுக்கு ஓவைசி வார்னிங்
லக்னோ: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போல சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ., என்.ஆர்.சி ஆகியவற்றையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்; இல்லை எனில் டெல்லி ஷாகீன் பாக் (ஷாஹின் பாக், ஷாகின் பாக்) போல உ.பி. வீதிகளில் போராட்டம் வெடிக்கும் என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவைசி எச்சரிக்கை
உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சியின் தலைவர் ஓவைசி தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகிறார். உ.பி.யின் பாரபங்கியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஓவைசி பேசுகையில், சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில் உ.பி.யின் வீதிகளும் டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களம் போல மாற்றப்படும் என்றார்.

பிரதமர் மோடி மீது அட்டாக்
அத்துடன் பிரதமர் மோடியையும் ஓவைசி கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி குறித்து பேசிய ஓவைசி, அவர் மட்டும் அரசியலுக்கு வராமல் சினிமாவுக்கு போயிருந்தால் நிறைய விருதுகளை வாங்கி இருப்பார். பிரதமர் மோடி மாயாஜாலக்காரர். அவர் தம்மை ஹீரோவாக்கி காட்டிக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவும் விடமாட்டார் என்றார்.

முஸ்லிம்கள் ஒற்றுமை
மேலும் சட்டசபைத் தேர்தல்களை கணக்கில் போட்டே விவசாய சட்டங்களை மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். உ.பி.யில் தாக்கூர்கள், பிராமணர்கள், யாதவர்கள், குர்மிகள் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்கும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் ஒன்றாக நின்று வலிமையை காட்ட முடியாது? அன்சாரி, குரேஷி சமூகங்கள் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு உ.பி. பாஜக அரசுதான் காரணம். குரேஷி சமூகத்தின் இறைச்சி கடைகளை மூடியதால் அவர்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் ஓவைசி கூறினார்.

ஷாகீன் பாக் போராட்ட களம்
டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி வரை சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. முஸ்லிம் பெண்கள் இரவும் பகலும் இந்த போராட்டத்தை மிக தீவிரமாக நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பொதுஇடங்களை காலவரையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதே நேரத்தில் ஷாகீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதேபோன்ற போராட்டங்களை உ.பி.யில் நடத்தப் போவதாக எச்சரித்திருக்கிறார் ஓவைசி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications