Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம.. உ.பியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சூப்பர் ஆஃபர்.. முதல்வர் ஆதித்யநாத் அதிரடி

உத்தரப் பிரதேசத்தில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மின்சார வாகன பயன்பாட்டாளருக்கு சில சலுகைகளை உத்தரப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. இந்த சலுகைகள் மாநிலம் முழுவதும் மின் வாகனத்தின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவு கூடுதல் நிதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது மின் வாகன பயன்பாட்டை பரவலாக்குவதற்கான புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

Chief Minister Yogi Adityanath announced incentives to increase the use of electric vehicles in Uttar Pradesh

அதாவது உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல மாநிலத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆர்டிஓக்களுக்கும் உத்தரவு ஆணை அனுப்பப்பட்டிருக்கிறது. உத்தரவின்படி இந்த சலுகைகள் இன்று முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில முதன்மை செயலாளர் எல்.வெங்கடேஸ்வர்லு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கை 2022 இன் படி உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும். தற்போது மட்டுமல்லாது எதிர்வரும் 2025 மற்றும் 2027ம் ஆண்டுகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் மின்சார வாகனத்திற்கும் இந்த வரி தள்ளுபடி பொருந்தும். பேட்டரிகள், அல்ட்ரா கேபாசிட்டர்கள் என பேட்டரி மூலம் இயங்கும் அனைத்து வாகனத்திற்கும் இது பொருந்தும்.

Chief Minister Yogi Adityanath announced incentives to increase the use of electric vehicles in Uttar Pradesh

வெறும் பைக் மட்டுமல்லாது, ஆட்டோ, வேன்கள், கார்கள் என அனைத்திற்கும் இந்த வரி தள்ளுபடி பொருந்தும். தற்போது வரை உத்தரப் பிரதேசத்தின் ஒரு அங்கமாக உள்ள ஆக்ராவின் போக்குவரத்து பதிவு அலுவலகத்தில் மொத்தம் 11,340 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,997 வாகனங்கள் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு பின்னர் பதிவாகியுள்ளன. இந்த வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்குவதாகவும் உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது.

இந்த மானியத்தால் மின்சார பைக்கின் மொத்த விலையில் சுமார் ரூ.10,000-15,000 வரை சலுகைகள் கிடைக்கும் என்றும், கார்களில் சுமார் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது. இந்த மானியம் பைக், கார்களுக்கு மட்டுமல்லாது பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதலில் வாங்கப்படும் 400 பேருந்துகளுக்கு தலா ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மேலும் அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் சம்பளத்திலிருந்து முன்பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+