இதுதான் முதல்முறை.. மோடியை நேரடியாக தாக்கி பேசிய பிரியங்கா.. என்ன சொன்னார் தெரியுமா?
முதல்முறையாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரச்சாரம் செய்துள்ளார்.
Recommended Video

லக்னோ: முதல்முறையாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரச்சாரம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக இன்றில் இருந்து உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கங்கை நதியில் படகில் சென்றபடி பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் பிரச்சாரத்தில் முதல் நாளே பிரதமர் மோடியை தாக்கி பிரியங்கா பேசினார். கடைசி நாள் இவர் வாரணாசியில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் எதிர்காலம்
பிரியங்கா தனது பேச்சில் நாம் வாக்களிக்கும் முன் யோசித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த நாட்டின் எதிர்காலத்தை அப்படியே மாற்ற கூடியது.

மாயாவதி குறித்து
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எங்கள் மீது கோபம் கொள்ள தேவையில்லை. இது கோபப்படுவதற்கான நேரம் கிடையாது. நம்முடைய ஒரே குறிக்கோள் பாஜகவை வீழ்த்துவது மட்டுமே. நாம் அதுதான் சேர்ந்து செய்ய வேண்டும்.

மோடி குறித்து
மோடி பணக்கார மக்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். தொழில் அதிபர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர் விவசாயிகளுக்காக திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அவர் ஏழை மக்களை கவனிக்கவில்லை.

யாருக்கு காவலாளி
பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறுகிறார். தன் பெயருக்கு முன்னே டிவிட்டரில் காவலன் என்று போட்டுக்கொள்கிறார். அது அவரது விருப்பம். அவர் ஏதாவது செய்யட்டும். ஆனால் மோடி மக்களின் காவலாளி கிடையாது. அவர் பணக்காரர்களின் காவலாளி மட்டும்தான், என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications