மழை நீரில் மூழ்கிய பயிர்கள்.. உடனே நிவாரணம் வழங்க உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத்.. சர்வே பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் 2 முறையாக உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்தது. மொரடாபாத் உள்பட பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

CM Yogi Adityanath orders to conduct relief work in rain hit areas

இதனால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக மொரடாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் மாநில அரசு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே தான் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விவாதித்தார். மேலும் மழை வெள்ளத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் சில முக்கிய அறிவுகளை வழங்கினார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத், அமைச்சரவை கூட்டத்தில் கூறியதாவது:

‛‛ஒவ்வொரு பகுதிகளிலும் மழைநீர் முறையாக வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். அதோடு ஒவ்வொரு ஆறுகளிலும் அபாயக்கட்ட அளவை தண்ணீர் தொடும் நிலையில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்காக அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்த சர்வே பணிகளை தொடங்க வேண்டும்'' என அறிவுறுத்தினார்.

இந்த உத்தரவை தொடர்ந்து மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட மொரடாபாத் மாவட்ட கலெக்டர் மன்வீந்திரா சிங் கூறுகையில், ‛‛சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. யாருடைய நிலத்திலாவது சர்வே பணி மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அந்த விண்ணப்பத்தின் மீது அடுத்த 72 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+