"உடலுறவு.." பயணியுடன் உல்லாசமாக இருந்த நடத்துநர்! கேமரா கிட்ட வந்ததும் பெட்ஷீட் எல்லாம் போட்டு! ஐயோ

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் ஒருவர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இப்போது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொது இடங்களில் யாராக இருந்தாலும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இப்போது எல்லாம் பொது இடங்களில் அத்துமீறி நடக்கும் சம்பங்கள் அதிகரித்தே வருகிறது. சில நேரங்களில் ஓடும் பேருந்தில் கூட இளசுகள் அத்துமீறுகிறார்கள்.

 Conductor lost his job as he caught Engaging In Sexual Act With Woman Inside Running Bus

இப்போதும் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. ஆனால், இந்த முறை உத்தரப் பிரதேசத்தில் பேருந்தை நிர்வகிக்க வேண்டிய நடத்துநரே உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடத்துநர் செய்த காரியம்: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஹத்ராஸில் இருந்து லக்னோவுக்கு செல்லும் பேருந்தில் நடத்துநர் ஒருவர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இரவு நேரம் என்பதால் பயணிகள் தூங்க வேண்டும் என்பதற்காக பேருந்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. அப்போது தான் நடத்துநர் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கே தூங்காமல் இருந்த சில பயணிகள் இதைக் கவனித்துள்ளனர்.

நடத்துநரின் செயலால் ஷாக் ஆன அந்த பயணிகள், இதை வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், வீடியோ எடுத்தபடியே பயணிகள் நடத்துநர் சீட்டிற்கு வருகிறார்கள். அப்போது நடத்துநரும் பெண் ஒருவர் சீட்டில் அமர்ந்தபடியே பெட்ஷீட்டை போர்த்தியபடி உல்லாசமாக இருக்கிறார்கள். கேமரா ப்ளாஷுடன் தன்னிடம் வருவதைப் பார்த்ததும் டென்ஷனான நடத்துநர் ஆத்திரமடைந்து மொபைலை பிடுங்க முயல்கிறார்.

வாக்குவாதம்: இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் அந்த பெண் பயணி பெட்ஷீட்டை கொண்டு முகத்தை மூடிக் கொள்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சுமார் ​​ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கேடுகெட்ட செயல் நடந்து வருவதாகப் பயணி ஒருவர் கூறுவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கவும் முடிவு செய்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன்பே நடந்துள்ளது. இருப்பினும், இப்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், இது எந்த இடத்தில் நடந்தது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை. இருப்பினும், அங்குள்ள அந்த வீடியோவை வைத்துப் பார்க்கும் போது லக்னோ அருகே இது நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

டிஸ்மிஸ்: இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், வட்டார போக்குவரத்து ஆணையத்தின் உதவி மண்டல மேலாளர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாகப் பேருந்தின் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஓடும் பேருந்தில் நடத்துநரே இப்படி பெண் பயணி ஒருவருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+