6 ஆண்டு போச்சே.. ‛இந்தியா’ கூட்டணியை விமர்சித்த பீடாதிபதி.. காங்கிரஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ‛இந்தியா' கூட்டணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறுதிச்சடங்கு செய்துவிட்டார். இதனால் அந்த கூட்டணி இருப்பதாக தெரியவில்லை என கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் பீடாதிபதியுமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் அதிரடியாக 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். ஆனால் இப்போது அவர் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

Congress expels Acharya Pramod Krishnam for 6 years after he says INDIA alliance not exists

இது‛இந்தியா' கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் கல்கி தாம் பீடாதிபதியாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தியின் ஆதரவாளராக இருந்த இவர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதாவது‛‛ ‛இந்தியா' கூட்டணி உருவானபோதே ஏராளமான நோய்கள் தாக்கியது. இதனால் இந்த கூட்டணி ஐசியூ மற்றம் வெண்டிலேட்டருக்கு சென்றது. இப்போது நிதிஷ் குமார் பாட்னாவில் இறுதி சடங்கு செய்துவிட்டார். இதனால் ‛இந்தியா' கூட்டணி இல்லை என்றே நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் மீது காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛ஒழுக்கமின்றி கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசியும், அறிக்கை வெளியிட்டும் வந்த காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணனை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு உடனடியாக நீக்கப்படுகிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+