அமித்ஷாவை அவதூறாக பேசியதாக வழக்கு.. நேரில் ஆஜரான ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது உத்தரபிரதேச நீதிமன்றம்
லக்னோ: அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தி இன்று சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகக் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தலின் போது, அமித்ஷாவை கொலைகாரர் என்று விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி ராகுல் காந்தி இன்று வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக உள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் தங்கியுள்ளார்.
வழக்கறிஞர் சந்தோஷ் பாண்டே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார். ராகுல் காந்தியை நீதிமன்றம் 30-45 நிமிடங்கள் காவலில் எடுத்தது. அதன்பிறகு ராகுல் காந்தியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனுவை கோர்ட் ஏற்றுக்கொண்டது. வழக்கின் மறு விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை. ராகுல் காந்தி யாரையும் அவதூறாக பேசவில்லை. அவர் அப்பாவி என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்" என்றார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் தங்கியுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜராக இருந்ததால், காலை நடைபெற இருந்த ராகுலின் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications