பாஜகவினர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. உருவ பொம்மையை எரித்து போராட்டம்
லக்னோ: ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் பாஜக நிர்வாகிகள் ஒன்று கூடி ராகுல் காந்தியின் உருவ பொம்பையை எரித்தனர்.
காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் நீண்ட உரை நிகழ்த்தினார். தனது உரையில் சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமர் மோடிக்கு வணக்கம் வைத்த விதம் தொடங்கி பிரதமர் மோடியின் கொள்கைகள் வரையிலும் சரமாரியாக விமர்சித்தார். மணிப்பூர் தொடங்கி, நாடாளுமன்ற நிகழ்வை ஒளிபரப்பும் சான்சாத் டிவி வரை அனைத்து விவகாரங்கள் குறித்தும் கடுமையாக பேசினார்.

ராகுல்காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது, "எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்திருக்கிறோம்.
ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதையும் அறிவுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் எதிர்க்கட்சிளாகிய நாங்கள் போராடி வருகிறோம்.
எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நான் உணர்கிறேன் . எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மை தான் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் நிதர்சனமான உண்மை.
சிவனின் இடதுதோள் ஓரமாக உள்ள திரிசூலம்.. வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அகிம்சையின் சின்னம் ஆகும். அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டிருக்கிறது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை. நாங்கள் உண்மையை பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் சின்னமான அபய் முத்ரா. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள் ஆகும்.
கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்திய உலகம் அறிந்ததாக தெரிவித்தார். அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? காந்தி இறக்கவில்லை. அவருடன் உயிருடன் இருக்கிறார்.
இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்" என்று ஆவேசமாக ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தார்.
முன்னதாக ராகுல் காந்தி , பாஜகவினரை சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள் என்று பேசிய போதும், பாஜக மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கூறிய போதும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டார்கள்.
ராகுல் காந்தி பேசும்போதே இடைமறித்து எழுந்து நின்று பேசிய பிரதமர் மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கடுமையாக பதிலடி கொடுத்தார் கூறினார். இதேபபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல்காந்தி பேசும் போது இடையில் குறுக்கிட்டு நின்று கடுமையான பதிலடி கொடுத்தார்.
உள்துறை அமித் ஷா பேசும் போது, "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
இதனிடையே ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் பாஜக நிர்வாகிகள் ஒன்று கூடி ராகுல் காந்தியின் உருவ பொம்பையை எரித்தனர். அத்துடன் ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.
-
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications