பெட்ரூமில் மகளுடன் இன்னொருத்தர்.. இழுத்து பூட்டி தீ வைத்த அப்பா.. கருகிய 2 உயிர்கள்.. திருந்தாத உபி

காதலர்களை உயிருடன் தீ வைத்து எரித்து கொன்ற குடும்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பெட்ரூமுக்குள் மகளுடன் இன்னொரு இளைஞனை பார்த்துவிட்டார் பெற்ற தந்தை.. இதனால் 2 பேரையும் ரூமுக்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு, மொத்தமாக மண்ணெண்ணையை ஊற்றிதீ வைத்து கொளுத்தி எரித்துவிட்டார்.. இந்த சம்பவம் உபியில் நடந்துள்ளது.

நாளுக்கு நாள் வடமாநிலங்களில் அக்கிரமங்களும், அநியாயங்களும் அதிகரித்து வருகின்றன.. வன்முறைகளின் எண்ணிக்கைகள் பெருகி வருகிறது.

குறிப்பாக படிப்பறிவில்லாத கிராமங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. கொலை செய்வதுடன், அவர்களை உயிருடன் கொளுத்துவது என்பது இவர்களுக்கு சர்வசாதாரணமாக இருக்கிறது.

பண்டா மாவட்டம்

பண்டா மாவட்டம்

அப்படித்தான் பண்டா மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது போலா என்ற இளைஞர் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. பிரியங்காவுக்கு 19 வயசாகிறது.. இவர்கள் காதல் உச்சத்தில் இருந்த நேரம்தான், லாக்டவுன் போடப்பட்டு விடப்பட்டது. அதனால் இவர்களால் சந்தித்து கொள்ளவே முடியவில்லை.

காதலர்

காதலர்

ஒருநாள் பிரியங்காவை எப்படியாவது நேரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்தார் போலா.. அதன்படியே காதலியை சந்திக்க ஆசையாக அவர் வீட்டுக்கும் வந்தார். இந்த விஷயம் பிரியாங்காவின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது.. உடனே அவர்கள் 2 பேரும் இருந்த ரூமின் வெளிப்பக்கத்தை பூட்டி விட்டனர். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்களை எல்லாருக்கும் போனை போட்டு விஷயத்தை சொல்லி வரவழைத்தனர்.

அறைக்கதவு

அறைக்கதவு

பின்னர் எல்லாரும் சேர்ந்து, காதலர்கள் இருந்த ரூமில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயையும் வைத்து கொளுத்திவிட்டனர்.. இதனால் அறை முழுவதும் பற்றிக் கொண்டு எரிய, 2 பேருமே ரூமில் இருந்து அலறி துடித்தனர்.. கொஞ்ச நேரத்தில் 2 பேரின் சத்தமும் அடங்கிவிட்டது.. அப்படியே எரிந்து கருகியும்விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு விஷயம் பறந்தது.. விரைந்து வந்த அவர்கள் காதலர்களின் சடலத்தைமீட்டு, பிரியங்காவின் அம்மா, அப்பா, சகோதரர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

காதல் ஜோடி

காதல் ஜோடி

மேலும் பிரியங்காவின் சொந்தக்காரர்கள் 5 பேர் மீது கேஸ் போடப்பட்டுள்ளது.. இத்தனைக்கும் இந்த காதல் ஜோடி ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தானாம். ஆனால் அந்த இளைஞரை லவ் பண்ணுவது பிரியங்கா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை.. நீண்ட நாட்களாக இந்த காதலுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரியங்காவை இன்னொருத்தருக்கு கல்யாணம் செய்ய வீட்டில் பேசி முடித்திருந்திருக்கிறார்கள்

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த கல்யாணத்துக்கு பிரியங்கா எதிர்ப்பு காட்டியபடியே வந்துள்ளார்... வீட்டில் தகராறும் அடிக்கடி வந்து போயுள்ளது.. இந்நிலையில் திடீரென மகள் ரூமில் அந்த இளைஞனை கண்டதும் ஆத்திரத்தில் தீ வைத்து விட்டதாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.. உயிருடன் 2 பேரை கொளுத்தி கொன்ற சம்பவம் சம்பவம் உபியை உலுக்கி எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+