கொடுமை.. ரூ.200 க்கு கொலையா.. சுட்டுத்தள்ளிய கொடூரன்.. சுருண்டு மாண்ட தலித் இளைஞர்.. கதறிய குடும்பம்

குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ராஜ்பூர் கலன் எஸ்பி அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ரூ.200 கடனை திருப்பி செலுத்தாததால் தலித் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அவரது சகோதரர் உட்பட குடும்பத்தினர் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "முசாபர்நகர் மாவட்டத்தின் ராஜ்பூர் கலன் பகுதியில் சஞ்சீவ் குமார்(35) என்பவர் தனது தம்பி மோஹித் குமார் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். கூலி தொழிலை செய்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வரும் சஞ்சீவ் அவ்வப்போது குடும்ப தேவைகளுக்கு ரூ.200, ரூ.500 என கடனை வாங்கியுள்ளார்.

இப்படி இருக்கையில் இதே பகுதியில் வசித்து வந்த விஜேந்திர சிங், தனக்கு சேர வேண்டிய ரூ.200 பணத்தை சஞ்சீவ் குமாரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் சஞ்சீவ் குமார் இதனை மறுத்திருக்கிறார். விஜேந்திர சிங்கிடம் தான் எந்த கடனையும் வாங்கவில்லை என்றும், எனவே கடனை திருப்பி தர முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த பிரச்னை கடந்த இரண்டு தினங்களாக நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று சஞ்சீவ் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த விஜேந்தர் கடனை கேட்டு மிரட்டியுள்ளார்.

 கடன்

கடன்

இதனை எதிர்பார்க்காத சஞ்சீவ் தான் எந்த கடனையும் வாங்கவில்லையென மீண்டும் மீண்டும் கூறவே விஜேந்தர் சஞ்சீவை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சஞ்சீவ், தற்போது பணம் இல்லையென்றும் பின்னர் தருவதாகவும் கூற, விஜேந்தர் வந்த வேகத்தில் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் வீடே களேபரமாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு 1 மணி நேரம் இருக்கையில் மீண்டும் விஜேந்தர் தனது ஆட்களுடன் வந்து வீட்டில் உள்ளவர்கள் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சீவ் உயிரிழந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

 சடலம் மீட்பு

சடலம் மீட்பு

நாங்கள் சஞ்சீவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தோம். அவருடைய தம்பி மோஹித் குமார், சஞ்சீவின் குழந்தைகள் இருவருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். இச்சவம்பவத்திழல் முக்கிய குற்றவாளியான விஜேந்திர சிங் தலைமறைவாகியுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார்" என்று ராஜ்பூர் கலன் எஸ்பி அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

 மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவம்

அதேபோல குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக விஜேந்தர் சிங் மீது ஐபிசி பிரிவுகள் 302, 307 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. இதற்கு முன்னர் கோயில் அன்னதானத்தில் தலித்துக்கள் பங்கேற்க தடை விதித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற ராஜ்பூர் கலன் பகுதியில் உள்ள காளி கோயிலில் கடந்த மாதம் 26ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

புகார்

புகார்

இந்நிகழ்ச்சியின் இறுதியாக பகவத் கீதை ஓதப்பட்டது. இதனையடுத்து அன்னாதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் பங்கேற்க அப்பகுதி தலித் மக்கள் சிலர் கோயிலுக்கு வந்திருந்தனர். அவர்களை கோயில் நிர்வாகிகள் சிலர் தனியாக அமர சொன்னார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் அனுப்பி வைத்துவிட்டனர். இந்த சம்பவம் பேசுபொருளானதையடுத்து 'பீம் ஆர்மி' தலைவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கோயில் நிர்வாகிகள் மூவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+