கபடி வீராங்கனைகளுக்கு டாய்லட் அறையில் உணவு விநியோகம்.. உ.பியில் நடந்த கொடுமை.. பரவும் வீடியோ!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு டாய்லட்டில் வைத்து உணவு விநியோகம் செய்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இப்படித்தான் வீரர்களுக்கு பாஜக மதிப்பு கொடுக்குமா? என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் விமர்சித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஷகரான்பூர் மாவட்டத்தில் 17-வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கபடி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டித்தொடரில் பங்கேற்க மாநிலம் முழுவதிலும் இருந்து பல மாணவிகள் ஷகரான்பூர் வருகை தந்துள்ளனர்.

டாய்லட்டில் வைத்து பரிமாறப்பட்ட உணவு
இந்த நிலையில், போட்டித்தொடரில் பங்கேற்க வந்த வீராங்கனைகளுக்கு டாய்லட்டில் வைத்து பூரி, ரைஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், டாய்லட்டில் பாத்திரங்களில் வரிசையாக உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

பூரி, அரிசி சாதம்
இந்த உணவு பொருட்களை கபடி வீராங்கனைகள் தங்கள் கைகளில் வைத்திருந்த பிளேட்டுகளில் எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றனர். பூரி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடியோ எடுத்த நபர் அப்படியே மறுபக்கம் காட்டுகிறார். அதில், கழிவறை என்பது தெளிவாக தெரிகிறது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடும் விமர்சனம்
மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்க வரும் வீராங்கனைகளுக்கு உரிய வசதியின்றி இப்படியா டாய்லட்டில் வைத்து உணவு வழங்கப்படும் என்று பலரும் மாநில அரசை கேள்விக்குள்ளாக்கி விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி உத்தர பிரதேச அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கிளப்பி வரும் நிலையில், ஷஹரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை மாநில அரசு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

போதிய இடவசதி இல்லாததால்
ஆனால், தனது செயலை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சக்சேனா, ''போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் உணவுப் பொருட்கள் அந்த அறையில் வைக்கப்பட்டது'' என்றார். இது குறித்து சக்சேனா கூறுகையில், ''பாத்ரூமில் உணவுப்பொருள் வைக்கப்படவில்லை. மழை பெய்த காரணத்தினால் மட்டுமே நீச்சல் குளம் பகுதியில் நாங்கள் இந்த ஏற்பாட்டை செய்தோம். நீச்சல் குளத்திற்கு அருகே இருந்த உடைமாற்றும் அறையில் உணவுப்பொருள் வைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மழையும் பெய்து கொண்டிருந்தால் வேறு இடத்தில் உணவை வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது'' என்றார்.

வீரர்களுக்கு இப்படித்தான் மதிப்பு கொடுப்பீர்களா
கழிவறையில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஒய் சதீஷ் ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், ''கபடி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு டாய்லட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாஜக இப்படித்தான் வீரர்களுக்கு மதிப்பு கொடுக்கிறதா?.. இது மிகவும் வெட்கக்கேடானது'' என்று பதிவிட்டுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications