கள்ளக்காதலனை வீட்டில் தங்க அனுமதிக்குமாறு அடம்பிடித்த மனைவி.. கணவனை வழிக்கு கொண்டுவர செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கள்ளக்காதலனை வீட்டில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று அடம்பிடித்த மனைவி, அப்படி அனுமதிக்க மறுத்தால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கூறி மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மரில் ஏறி மிரட்டல் விடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன் பரிதவித்து போனார்.

திருமண உறவை மிகவும் சிக்கலா நிலைக்கு தள்ளும் விஷயம் என்றால் அது கள்ளக்காதல் தான். ஒருவரிடம் எதிர்பார்க்கும் அன்பு, அரவணைப்பு போதிய அளவில் கிடைக்காமல் போகும் போது, சிலர் மிகவும் தவறான முடிவெடுக்கிறார்கள். திருமணத்தை மீறி வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொள்கிறார்கள். இந்த உறவினை வெளியில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். இப்படியான உறவுகள் பெரும்பாலும் கடைசியில் மரணத்தில் தான் முடிகின்றன.

Do you know what wife did when she asked her husband for permission to stay home with her boyfriend

திருமணத்தை மீறிய உறவு வைப்போர் இந்த சமூகத்தில் அசிங்கமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். சந்தர்ப்பவாதத்தில் முடிவெடுப்பது ஒருபுறம் எனில், சிலர், ஆசை காட்டி மயக்கி தங்கள் ( ஆண் பெண் இருவருமே) வலையில் வீழ்த்துகிறார்கள்.. இதுவும் பல இடங்களில் நடக்கிறது. கள்ளக்காதலில் வீழ்ந்த ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் விவாகரத்து செய்து பிரிந்துவிடுவதே நல்லதாக பார்க்கப்படுகிறது... இல்லாவிட்டால் பெரிய சிக்கலை வாழ்நாளில் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு ஒரு சிக்கலான சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்த ராம் கோவிந்த் என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஷில்பாவுக்கு 34 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு (கள்ளத்தொடர்பு) ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக கள்ள உறவில் இருந்து வந்தார்களாம்.. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் அதிர்ச்சி அடைந்தடன், தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.

இதனால் கடும் கோபம் அடைந்த ஷில்பா தனது கள்ளக்காதலனை வீட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு கணவனிடம் கேட்டுள்ளார். இதற்கு கணவர் மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஷில்பா, தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி உள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு வற்புறுத்தி உள்ளார்கள். ஆனால், ஷில்பா கீழே இறங்க மறுத்தார்.

இதுபற்றி கோரக்பூர் மாவட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே போலீஸ் விசாரணையில் ராம்கோவிந்தின் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கேட்டுள்ளார். இந்த கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்ததால் ஷில்பா டிரான்ஸ்பார்மரில் ஏறினாராம். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+