நன்கொடைகளை அள்ளும் அயோத்தி ராமர் கோயில்.. இத்தனை கோடி ரூபாயா.. ஆஹா வாரி வழங்கும் பக்தர்கள்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு வரும் நன்கொடை ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை அதிகரித்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கையும் அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, ராமர் கோயில் அறக்கட்டளை தினமும் மூன்று முதல் நான்கு லட்சம் வரை நன்கொடை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கோயில் அறகட்டளைக்கு மாதம் தோறும் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை நிதி கிடைக்கிறது.
இந்த தொகை அனைத்தும் கோயில் ஊழியர்களால் வெறும் கைகளால் எண்ணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இதற்காக பணம் எண்ணும் மிஷின் வாங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், "நாங்கள் இந்த பணத்தை ஒவ்வொரு மாதமும் 5 மற்றும் 20ம் தேதிகளில் எண்ணி வந்தோம். ஆனால், தற்போது தினமும் இப்பணிகள் நடக்கிறது" என்று கூறியுள்ளார்.
ரொக்க பணமாக தவிர்த்து, ஆன்லைன் வழியிலும், காசோலை வழியாகவும் நன்கொடை கோயிலுக்கு கிடைக்கிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு நாடு தழுவிய நிதி சேகரிப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.5,000 வரை நன்கொடை பெறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications