பயங்கர ஷாக்.. உத்தர பிரதேசத்தில் பிளாட்பாரத்தில் ஏறி தடம்புரண்ட மின்சார ரயில்.. காரணம் என்ன?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் நேற்று இரவு திடீரென்று தடம்புரண்டது. ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் நேற்று இரவு 10.49 மணிக்கு மதுரா ரயில் நிலையம் சென்றது.

அப்போது திடீரென்று என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தடம் புரண்டது. திடீரென்று ரயில் என்ஜின் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி பிளாட்பார்ம் மீது ஏறி நின்றது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ரயில் என்ஜின் தடம் புரண்டது எப்படி என்பது பற்றி தெரியவில்லை. அதோடு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ரயில் என்ஜினை பிளாட்பாரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இது பற்றி மதுரா ரயில் நிலையத்தின் இயக்குனர் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‛‛ரயிலில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் இறக்கிவிடப்பட்டுள்ளது. உயிர்சேதம் எதுவும் இல்லை. ரயில் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
இந்த சம்பவம் நேற்று இரவு மதுரா ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications