"குடும்ப ஐடி திட்டம்.." நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்க்க யோகி அரசு பிளான்!
அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்க்க உத்தர பிரதேச அரசு புதிதாக குடும்ப ஐடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
லக்னோ: அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்ப்பதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அந்த மாநிலத்தில் குடும்ப ஐடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடந்த ஜனவரி மாதம் 12 இலக்கங்கள் கொண்ட குடும்ப அடையாள எண் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 17 அரசு துறைகளின் தரவுகளை இணைக்க கோரப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் இல்லாத மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறாத குடும்பங்களுக்கு இலவச அல்லது மலிவான ரேஷன் வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த குடும்ப ஐடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது உத்தர பிரதேசத்தில் 3.6 கோடி குடும்பங்கள் மற்றும் 15 ஆதார் சரிபார்க்கப்பட்ட்ட ரேஷன் கார்டுகள் பற்றிய தரவுகள் மாநில அரசிடம் உள்ளன. ரேஷன் கார்டு எண் குடும்ப அடையாள எண்ணாக இருப்பதால், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு தற்போது இந்த குடும்ப ஐடி எண் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேரடியாக நலத்திட்டங்கள் சென்று அடைவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை உத்தர பிரதேச அரசு செயல்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் அந்த மாநில அரசு செயல்படுத்தி வரும் குடும்ப திட்டம் ( Kutumba project ) போல இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் வசித்து வரும் குடும்பங்களுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், அனைத்து பயனாளி குடும்பங்களுக்கும் குடும்ப அடையாள அட்டைகளை வழங்குவோம் என்று நம்பிக்கை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் மூலமாக பயனாளிகளுக்கு நேரடியாக நலத்திட்டங்களை கொண்டு சேர்த்தது பாஜகவிற்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. இத்தகைய நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த குடும்ப ஐடி திட்டம் மூலமாகவும் பயனாளிகளின் மத்தியில் பாஜகவிற்கு மேலும் வலு சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications