டிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உபி போலீசார் தேடி வந்த தொடர் கொலைகாரரான அஸ்வினி குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல டிக்டாக் தொடர் கொலைகாரனான அஸ்வினி குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸ்வினி குமார் ஒரு டிக்டாக் பைத்தியம். வில்லன்கள் பேசும் டயலாக்குகளை எல்லாம் டிக்டாக் செய்து பதிவிடுவது குமாரின் வழக்கம். நிஜ வாழ்விலும் அஸ்வினி குமார் வில்லன் தான். நிறைய குற்ற சம்பவங்களில் தொடர்புடையவன்.

கடந்த 5 நாட்களில் மூன்று பேரை கொலை செய்திருக்கிறான் அஸ்வினி குமார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரின் 25 வயது மகன் மற்றும் 26 வயதான அவருடைய மருமகனை அஸ்வினி குமார் சுட்டுக்கொன்றான். மேலும் ஒருவரையும் அஸ்வினி குமார் கொலை செய்தான்.
இதையடுத்த அஸ்வினி குமாரை அதிபயங்கர குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த உத்தர பிரதேச காவல் துறை, அவனை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் பிஜ்னார் எனும் இடத்தில் அஸ்வினி குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
பிஜ்னாரில் உள்ள நாகினா எனும் இடத்தில் பேருந்தில் ஏறி வேறு ஊருக்கு தப்பிக்க முயன்றான் அஸ்வினி குமார். அப்போது அவனை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் மாட்டிக்கொண்டதை தொடர்ந்து, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான் அஸ்வினி குமார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications