அதிகரித்த கலவரம்.. பல இடங்களில் மத மோதல்.. உ.பி போலீசாருக்கு விடுமுறை ரத்து.. யோகி ஆக்சன்!
லக்னோ: இந்தியாவில் சில இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடக்கும் நிலையிலும், பண்டிகைகளை கருத்தில் கொண்டும் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுப்பில் உள்ள அனைவரும் 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சில வாரங்களாக மத ரீதியிலான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. சில இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்தர பிரதேசத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விடுமுறை ரத்து
அதாவது ரம்ஜான், அக்ஷய திருதியை பண்டிகைகள் மே 3ல் ஒரே நாளில் வருகின்றன. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட எஸ்பி முதல் அனைத்து போலீசாருக்கும் , நிர்வாக அதிகாரிகளுக்கும் மே 4 வரை விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. தற்போது விடுப்பில் உள்ளவர்கள் 24 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

கூடுதல் போலீசார்
மேலும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும். மேலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். காலை, மாலையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வரும் நாட்களில் மதம்சார்ந்த முக்கிய விழாக்கள் நடக்கின்றன. ரம்ஜான் பண்டிகையும் அக்ஷய திரிதியையும் ஒரேநாளில் வர வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு போலீசார் சுறுசுறுப்பாகவும், விழிப்பாகவும் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஊர்வலங்களுக்கு அனுமதி
மேலும், ‛‛ஒவ்வொருவருக்கும் அவரவர் மத சித்தாந்தத்தின்படி வழிபாடு, விழாக்களை கொண்டாட சுதந்திரம் உள்ளது. இருப்பினும் யாருக்கும் இடையூறு இன்றி மைக்குகள் பயன்படுத்தி விழாக்களை கொண்டாட வேண்டும். உரிய அனுமதியின்றி மதம் சார்ந்த ஊர்வலம் நடத்தக்கூடாது. பாரம்பரியமான மதஊர்வலங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். புதிய ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்க கூடாது.

எழுதி வாங்க வேண்டும்
மேலும் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பு அமைதி, நல்லிணக்கத்தை பேணுவது குறித்து எடுத்து கூறுவதோடு அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் எழுதி வாங்க வேண்டும். விழாக்காலங்களில் தவறான கருத்துகளை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 24 மணி நேரத்தில் போலீசார் தரப்பில் மததலைவர்கள், பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications