உ.பி முதல்வராக.. 2வது முறையாக மீண்டும் பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்.. பிரதமர் மோடி பங்கேற்பு
உபியில் யோகி முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார்
லக்னோ: உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார். லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் யோகி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது.
நம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உத்திரபிரதேசம் கருதப்பட்டாலும், அம்மாநில தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிகள்தான் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பது கசப்பான உண்மை.
அந்த வகையில், இந்த முறையும் சாதி, மத அரசியலை முன்னிறுத்தியே தேர்தலை உத்திரபிரதேச கட்சிகள் முன்னெடுத்தன..

தொகுதிகள்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில், 37 வருடங்களுக்கு பின்பு ஒரே கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது... இது இதற்கு முன்பு நடக்காத உபி வரலாறு ஆகும்.. உபி முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார்.. லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்து கொண்டுள்ள நிலையில், இந்த பதவியேற்பு நடந்துள்ளது.

அகிலேஷ்
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது இல்லை என அகிலேஷ் யாதவ் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

அழைப்பு
மேலும், ஏராளமான தொழில் அதிபர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.. வயது குறைவான எம்எல்ஏக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மேலிடம் பிளான் செய்வதாகவும், வரப்போகும் எம்பி தேர்தலை கணக்கில் வைத்தே இந்த அமைச்சரவை லிஸ்ட் தயாராகி உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்தன.. யோகி அமைச்சரவையில் 5 பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
Recommended Video

பிரம்மாண்டம்
முன்னதாக, இந்த விழா நடைபெறும், வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் மிகவும் பிரமாண்டமாக தயார்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்துக்கு செல்லும் சாலைகள் எல்லாமே அலங்கார மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.. எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத்தின் முழு உருவ கட் அவுட்டுகளாகவே காட்சியளிக்கின்றன... யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வருகை தந்திருந்தனற். எனவே, லக்னோ முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது












Click it and Unblock the Notifications